Soori: மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும்- ரசிகருக்கு தக்க பதிலளித்த சூரி!
Soori X Post: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருப்பவர் சூரி. இவர் சமீபத்தில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின்போது கலந்துகொண்ட இவர், துணை முதல் அமைச்சருக்கு நினைவு பரிசை வழங்கியிருந்தார். அது குறித்து ரசிகர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் தவறான கருத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில், அதற்கு தக்க பதிலை சூரி வழங்கியுள்ளார்.
நடிகர் சூரி (Soori) ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் துணை வேடங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்துவந்தார். இந்நிலையில் இதையடுத்து நகைச்சுவை நடிகராக பணியாற்றிய இவர், தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா (Suriya) வரை பல்வேறு உச்ச பிரபலங்களின் படங்களில் இணைந்து நடித்துள்ளார். அந்த வகையில் இவர் தற்போது கதாநாயகனாக படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக கடந்த 2025ம் ஆண்டு மாமன் (Maaman) என்ற படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படம் சூரிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படமாகவே அமைந்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக மண்டாடி (Mandaadi) என்ற படத்திலும் இவர் நடித்துவருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் மதுரை பாலமேட்டில் (Madurai Palamedu) நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சூரி கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (Deputy Chief Minister Udhayanidhi Stalin) வந்திருந்த நிலையில், அவருக்கு சால்வை போர்த்தி, நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினார். இது தொடர்பான வீடியோ ஒன்றை பகிர்ந்து, ரசிகர் ஒருவர் சூரியின் கோபத்தை சீண்டும் வகையில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த கருத்திற்கு பதிலளிக்கும் விதத்தில் சூரி எக்ஸ் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.




இதையும் படிங்க: எனது அடுத்த படங்கள் இப்படித்தான் இருக்கும் – ரசிகர்களுக்கு ஹேப்பி செய்தி சொன்ன சிவகார்த்திகேயன்!
ரசிகரின் கருத்திற்கு தக்க பதிலடி கொடுத்த சூரி :
அந்த ரசிகர், சூரியை பற்றி கொஞ்சம் தரம் குறைவாகவும், துணை முதல்வருக்கு துணை நின்றாள் சூரியின் படத்தை எவ்வாறு வெளியிடவிடுவார்கள் என கருத்தை தெரிவித்திருந்தார். அதற்கு நடிகர் சூரி, “தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல், மரியாதையுடன் பேசும் பண்புதான் என்றும், கணவன் கிடைக்கிறது என்பதற்கு சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது.
இதையும் படிங்க: கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்
மதிப்பு இருந்தால் அதற்கேற்ற பொறுப்பும் இருக்கவேண்டும் என அதில் கூறினார். மேலும் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு கருத்து இல்லை, எது வெறும் சத்தம்” என அவர் அதில் கூறினார். பின் சினிமாவில் படம் எப்படி ஓடும், மக்கள் எதை விரும்புவார்கள் என அவர் அதில் பேசியுள்ளார்.
ரசிகருக்கு தக்கபதிலடி கொடுத்து சூரி வெளியிட்ட எக்ஸ் பதிவு :
தம்பி,
தமிழனின் அடையாளமே
யாரையும் இழிவுபடுத்தாமல்
மரியாதையோடு பேசும் பண்பாடுதான்.கவனம் கிடைக்கிறது என்பதற்காக
சொல்வதெல்லாம்
உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா
அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும்.ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள்
கருத்து இல்லை அது வெறும் சத்தம்.சினிமாவுல
ஒரு படத்தின்…— Actor Soori (@sooriofficial) January 17, 2026
நடிகர் சூரி, தற்போது மண்டாடி என்ற படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியநிலையில், இந்த 2026ம் ஆண்டில் வெளியாகவுள்ளது. இதில் சூரி, மகிமா நம்பியார், சுஹாஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் கப்பலோட்டிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவருகிறது எனது குறிப்பிடத்தக்கது.