Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

AR.Rhman: அது என்னை ரொம்பவே பாதிக்கிறது.. மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

AR.Rahman About Publics Current Opinion On His Music: பான் இந்திய சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரின் இசையமைப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இவர் தனது மன வருத்தம் குறித்து தெரிவித்துள்ளார்.

AR.Rhman: அது என்னை ரொம்பவே பாதிக்கிறது.. மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்!
ஏ.ஆர்.ரஹ்மான்Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Published: 16 Jan 2026 16:46 PM IST

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான் (AR.Rahman). இவரின் இசையமைப்பில் தமிழில் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) படங்கள் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) படம் வரை பல்வேறு உச்ச நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் தற்போது தமிழ் மொழியையும் கடந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் இசையமைப்பதிலும் ஆர்வமாக இருந்துவருகிறார். தெலுங்கில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிவரும் ராம் சரணின் (Ram Charan) பெடி (Peddi) என்ற படத்திற்கு இவர் இசையமைத்துவருகிறார். இப்படத்திலிருந்து சமீபத்தில் சிக்கிரி என்ற பாடல் வெளியாகி சிறப்பான வரவேற்பையே பெற்றிருந்தது. மேலும் தனுஷின் இந்தி படமான தேரே இஷ்க் மே (Tere Ishq Mein) படத்திற்கும் இவர்தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் பிரபு தேவாவின் மூன் வாக் என படத்திற்கும் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் இவர்தான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தனது இசையமைப்புமீது மக்களுக்கு ஏற்படும் கருத்து குறித்து மனம் திறந்துள்ளார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் 9 செலிப்ரேஷன் வீக்.. வீட்டிற்கு கெஸ்டாக வந்த சாண்டி – கவின்.. வைரலாகும் புரோமோ!

தனது இசையமைப்பு மீது மக்களுக்கு இருக்கும் கருது குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் :

அண்ட் நேர்காணலில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “இப்போதெல்லாம் மக்கள் வந்து என்னிடம் சொல்லுகிறார்கள், 90ஸ்களில் நான் நல்ல பாடல்களை இசையமைத்து வாங்கியிருக்கிறேன் என கூறுகிறார்கள். நான் இப்பொது அதுபோன்று வழங்கவில்லையா? என ஒரு முட்டாள் மாதிரி தெரிகிறது. நல்ல மனநிலை இல்லாதபோது, அது நம்மை ரொம்பவே யோசிக்கவைக்கிறது மேலும் பாதிக்கிறது.

இதையும் படிங்க: ஜீ 5 ஓடிடியில் உள்ள ஜானகி V v/s ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தை பார்த்திருக்கீங்களா?

எனக்கு ராமாயணம் படத்தை எனது சொந்த இசைக்குழுவை வைத்து பண்ணுகிறேன். மணி ரத்னம் படம் இப்போது இருத்தல் கொஞ்ச படங்களில்தான் பண்ணுறேன்.கடந்த 6 வருடங்களில் 20 முதல் 30 படங்கள் பண்ணிருக்கேன்.மேலும் எனக்கென்று ஒரு நேரம் வேண்டும் “என அதில் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by ARR (@arrahman)

இசையமைப்பாளார் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது குறைவான படங்களிலே தமிழில் இசையமைத்துவருகிறார். தற்போது தமிழில் இனம் இசையமைப்பாளர்களான அனிருத், ஜிவி.பிரகாஷ் மற்றும் சாய் அபயங்கர் போன்ற இசையமைப்பாளர் தொடர்ந்து பெரிய படங்களுக்கு இசையமைக்கும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பட வாய்ப்புகள் தமிழில் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.