ஜீ 5 ஓடிடியில் உள்ள ஜானகி V v/s ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தை பார்த்திருக்கீங்களா?
JSK: Janaki V v/s State of Kerala: மலையாள சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தப் படம் ஜானகி V v/s ஸ்டேட் ஆஃப் கேரளா. இந்தப் படத்தை ஜீ 5 ஓடிடியில் பார்க்காதவர்கள் நிச்சயமாக பார்க்க வேண்டும்.
மலையாள சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஜானகி V v/s ஸ்டேட் ஆஃப் கேரளா. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே பல சர்ச்சைகளை சந்தித்தது. தொடர்ந்து இந்தப் படத்தை பிரபல இயக்குநர் பிரவீன் நாராயணன் எழுதி இயக்கி உள்ளார். கோர்ட்ரூம் லீகல் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த ஜானகி V v/s ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தில் நடிகர் சுரேஷ் கோபி முன்னணி வேடத்தில் நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகை அனுபமா பரமேசுவரன் நாயகியாக நடித்து இருந்தார்.
மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஸ்ருதி ராமச்சந்திரன், மாதவ் சுரேஷ், அஸ்கர் அலி, திவ்யா பிள்ளை, பைஜு சந்தோஷ், அபிஷேக் ரவீந்திரன், வைஷ்ணவி ராஜ், மேதா பல்லவி, யது கிருஷ்ணன், ஷோபி திலகன், திலீப் மேனன், ஜெயன் சேர்த்தலா, கோட்டயம் ரமேஷ், ஜாய் மேத்யூ, ஜோஸ் ஷோனாத்ரி, ஜோஸ் ஷோனாத்ரி, ஜோஸ் ஷோனாத்ரி, ரஜித் ஜோஷியா, ரஜித் மேனன் சைட், ஷபீர் கான், மஞ்சுஸ்ரீ நாயர், ரதீஷ் கிருஷ்ணன், ஜெய் விஷ்ணு, முஸ்தபா சர்கம், அஸ்வின் கோபி நாத், அகில் ஜிபின் ஆபிரகாம் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
ஜானகி V v/s ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின் கதை என்ன?
கேரளாவை பூர்விகமாக கொண்ட அனுபமா பரமேசுவரன் பெங்களூருவில் வேலைப் பார்த்து வருகிறார். விடுமுறையில் தனது அப்பாவை பார்ப்பதற்காக நண்பர்களுடன் ஊருக்கு வரும் அனுபமா பாலியல் ரீதியாக துன்படுத்துப்படுகிறார். தொடர்ந்து தந்தையுடன் வெளியூருக்கு செல்லும் போது ரயில் நிலையத்தில் தந்தையை தொலைக்கிறார்.




Also Read… ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த பிரபலங்கள்… வைரலாகும் போட்டோஸ்
இதனைத் தொடர்ந்து தனது தந்தையை தேடி காவல்நிலையத்திற்கு வரும் அனுபமா பரமேசுவரன் அங்கு கூட்டத்தில் சிக்கி தனது தந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிந்தது காவல் நிலையத்திலேயே மயங்கி விழுகிறார். அவரை பரிசோதித்த மருத்துவர் அனுபமாவிற்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டுள்ளதை தெரிவிக்கிறார். அது ஒரு வழக்காக எடுத்து போலீஸ் விசாரிக்கிறது. இந்த வழக்கில் அனுபமா பரமேசுவரனுக்கு உறிய நீதி கிடைத்ததா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.