Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொங்கல் ஸ்பெஷல்… போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்து சொல்லும் படக்குழுவினர்!

Pongal Special Movie Posters: தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்கள் தயாராகி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் படங்களின் சிறப்பு போஸ்டர்களை படக்குழு பொங்கள் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

பொங்கல் ஸ்பெஷல்… போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்து சொல்லும் படக்குழுவினர்!
போஸ்டர்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 15 Jan 2026 20:52 PM IST

சர்தார் 2: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் சர்தார். கடந்த 2022-ம ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதுமட்டும் இன்றி இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் இந்த 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சர்தார் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

டயங்கரம்: தமிழ் சின்னத்திரையில் யூடியூபில் மக்களிடையே கவரும் வகையில் வீடியோவை வெளியிட்டு பல லட்சம் ரசிகர்களைப் பெற்றுள்ளவர் யூடியூபர் வி.ஜே.சித்து. இவரது விஜே சித்து விலாகிற்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து யூடியூபில் பிரபலமானவராக இருக்கும் விஜே சித்து தற்போது படம் ஒன்றை இயக்கி நாயகனாக நடித்துள்ளார். அந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படம் 2026-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டயங்கரம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

லெனின் பாண்டியன்: இயக்குநர் பாண்டியராஜ் எழுதி இயக்கி திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் லெனின் பாண்டியன். இந்தப் படத்தில் நடிகர்கள் இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன், ரோஜா, நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

லெனின் பாண்டியன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

அருள்வான்: நடிகர் அருள் நிதி நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் அருள்வான். இந்தப் படத்தை இயக்குநர் கணேஷ் விநாயகன் எழுதி இயக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அருள்நிதி உடன் நடிகர்கள் ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் போஸ்டர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர்.

Also Read… தலைவர் 173 படம் குறித்து முக்கிய அப்டேட்டை சொன்ன ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ

அருள்வான் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பஞ்சாயத்து தலைவராக ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ