ஜப்பானில் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது புஷ்பா 2 தி ரூல்… வைரலாகும் வீடியோ
Pushpa 2 The Rule: நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் புஷ்பா 2 தி ரூல். இந்தப் படத்தினை தற்போது ஜப்பானில் மிகவும் பிரமாண்டகாம வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெறுகிறது. குறிப்பாக மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் புஷ்பா 2 தி ரூல். இந்தப் படம் முன்னதாக நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் தொடர்ச்சியாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஜெகபதி பாபு, சுனில், ராவ் ரமேஷ், தனஞ்சய, பிரம்மாஜி, அஜய், ஆடுகளம் நரேன், அனசுயா பரத்வாஜ், கல்ப லதா, ஆதித்யா மேனன், தாரக் பொன்னப்பா, சௌரப் சச்தேவா, சத்யா, சண்முக், முரளிதர் கவுட், ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, பவனி கரணம், பிந்து சந்திரமௌலி, தயானந்த ரெட்டி, மைம் கோபி, ஸ்ரீதேஜ், திவி வத்யா, அஞ்சல் முன்ஜால், வித்யா பான்ஸ்ரிங்கர்ம், கிள்ளி கிராந்தி, ஸ்ரீலீலா என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.




ஜப்பானில் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது புஷ்பா 2 தி ரூல்:
2024-ம் ஆண்டு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை தற்போது ஜப்பானில் மீண்டும் பிரமாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற ஜனவரி மாதம் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு ஜப்பானில் வெளியாக உள்ளது. இதற்கான நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குநர் சுகுமார் உட்பட படக்குழுவினர் ஜப்பான் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Parasakthi: வசூலில் சாதனை படைத்ததா பராசக்தி? 2 நாட்கள் வசூல் இத்தனை கோடியா?
புஷ்பா 2 தி ரூல் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
After setting the Indian Box Office on WILDFIRE, his RULE reaches ‘The Land of the Rising Sun’ ❤🔥#Pushpa2TheRule Grand release in Japan on January 16th 💥💥#Pushpa2#WildFirePushpa#PushpaKunrin
Icon Star @alluarjun @iamRashmika @aryasukku #FahadhFaasil @ThisIsDSP… pic.twitter.com/a9gzFMkBaL
— Pushpa (@PushpaMovie) January 13, 2026
Also Read… Baadshaa: ‘நா ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி’… 31 ஆண்டுகளை கடந்தது ரஜினிகாந்தின் ‘பாட்ஷா’!