வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது… 8 ஆண்டுகளைக் கடந்தது சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம்
8 Years Of Thaanaa Serndha Koottam Movie: தமிழ் சினிமாவில் முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் படத்தை எழுதி இயக்கி உள்ளார். க்ரைம் காமெடி பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் கார்த்திக்,
கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், கலையரசன், ஆர்ஜே பாலாஜி, செந்தில், சத்யன், சிவசங்கர், நந்தா, சுரேஷ் சந்திர மேனன், தம்பி ராமையா, பிரம்மானந்தம், ஆனந்தராஜ், யோகி பாபு, சுதாகர், நிரோஷா, வினோதினி, பாலா சிங், வெங்கடேஷ் ஹரிநாதன், கடம் கிஷன், அம்மு அபிராமி, வெற்றியாளர் ராமச்சந்திரன், மீரா மிதுன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் வெளியாகி இந்த தானா சேர்ந்த கூட்டம் படம் தற்போது 8 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியா கிரீன் சார்பாக தயாரிப்பாளர் கே. இ. ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்த நிலையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




8 ஆண்டுகளைக் கடந்தது சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம்:
பட்டப் படிப்பை முடித்தும் வேலை கிடைக்காமல் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் அவர்களின் வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பது குறித்து இந்தப் படத்தில் பேசியுள்ளனர். மேலும் வேலையில்லா திண்ணாட்டம் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை இந்தப் படத்தில் பேசியுள்ளனர். இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.
Also Read… Ravi Mohan: என் படம் மட்டுமில்லை.. எல்லா படங்களும் எனக்கு ஒரு பாடம் தான்- ரவி மோகன்!
இணையத்தில் கவனம் பெரும் எக்ஸ் தள பதிவு:
8 Years of #ThaanaaSerndhaKoottam ❤️💥
A film filled with special memories and proud moments – giving us the title “Anbaana Fans” 😊@Suriya_offl #VigneshShivan @KeerthyOfficial @anirudhofficial #RamyaKrishnan #Karthick @nandaa_actor @RJ_Balaji pic.twitter.com/LToIv3LTnk— All India Suriya Fans Club (@Suriya_AISFC) January 12, 2026
Also Read… பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாண்ட்ரா… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்