பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாண்ட்ரா… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் இறுதிப் போட்டியில் 5 போட்டியாளர்கள் இருப்பார்கள். இப்படி இருந்த நிலையில் இந்த சீசனில் 4 போட்டியாளர்கள்தான் இறுதிப் போட்டியில் உள்ளனர் ஒருவர் வெளியேறுகிறார் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் தற்போது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ் சீசன் 9. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி கடந்த வாரம் நடைப்பெற்ற பணப்பெட்டி டாஸ்கில் இறுதிப் போட்டியில் இருந்த போட்டியாளர்கள் வினோத், விக்ரம், சபரி, சாண்ட்ரா, அரோரா மற்றும் திவ்யா என அனைவரும் விளையாடி 18 லட்சம் வரை பணப்பெட்டியில் பணத்தை சேர்த்தனர். இந்தப் பெட்டியை யார் எடுப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் பிக்பாஸ் டாக் லைனான எதிர்பாராத்ததை எதிர்பாருங்கள் என்பது போல யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் போட்டியாளர் கானா வினோத் பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை சற்றும் எதிர்பாராத மற்றப் போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நேற்றைய எபிசோடில் விஜய் சேதுபதியை சந்தித்த கானா வினோத் தான் ஏன் அந்தப் பெட்டியை எடுத்தேன் என்பதற்கான காரணத்தை தெளிவாக கூறினார். மேலும் கானா வினோத்தின் கடந்து வந்த பாதைக்கான வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த சீசனில் இதுதான் சிறந்த வீடியோ என்று தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் 5 போட்டியளர்கள் மட்டுமே உள்ளனர்.




பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாண்ட்ரா:
இந்த நிலையில் இதுவரை ஒவ்வொரு சீசனிலும் இறுதி வாரம் மொத்தம் 5 போட்டியாளர்கள் ஃபைனலிஸ்டாக இருப்பார்கள். அவர்களில் ஒவ்வொருவராக வாரம் முழுவதும் வெளியேற்றப்படுவார்கள். அப்படி இல்லை என்றால் இறுதி நாளில் ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த சீசனில் இறுதிப் போட்டியில் 4 பேட் மட்டுமே என்று கூறிய விஜய் சேதுபதி இன்று போட்டியில் இருந்து சாண்ட்ரா வெளியேறுவதாக விஜய் சேதுபதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Sudha Kongara: சூரரைப் போற்று படத்திற்கு பின்.. அப்படி வந்ததுதான் பராசக்தி – சுதா கொங்கரா பேச்சு!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day98 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/ngyRUt04rK
— Vijay Television (@vijaytelevision) January 11, 2026