Sudha Kongara: சூரரைப் போற்று படத்திற்கு பின்.. அப்படி வந்ததுதான் பராசக்தி – சுதா கொங்கரா பேச்சு!
Sudha kongara OTT Disappointment: பெண் இயக்குநராக பல சாதனையகளை செய்துவருபவர்தான் சுதா கொங்கரா. இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம் பராசக்தி. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சுதா கொங்கரா சூரரைப் போற்று பட நேரடி ஓடிடி ரிலீஸ் குறித்து மனம் திறந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று (Iruthi Sutru) மற்றும் சூரரைப் போற்று (Soorarai pottru) போன்ற பிரம்மாண்ட ஹிட் படங்களை கொடுத்திருப்பவர் இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara). இவரின் இயக்கத்தில் வெளியான இந்த படங்கள் மிக பிரம்மாண்ட வரவேற்பை பெற்று தேசிய அளவிலான பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த் படங்களின் வரிசையில் உருவாகியுள்ள படம்தான் பராசக்தி (Parasakthi). இதில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் ரவி மோகன் (Ravi Mohan), அதர்வா (Athrvaa) மற்றும் ஸ்ரீலீலா உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் இந்த படமானது மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த் படம் இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் தயாராகியுள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக சுதா கொங்கரா சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவர், சூரரைப் போற்று படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கு பிறகு பராசக்தி படத்தின் ரிலீஸ் எப்படி அமையவேண்டும் என்பது குறித்து தான் விரும்பியது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ‘ஜனநாயகன்’ ரிலீஸ் இல்லை.. ரத்தான முன்பதிவு.. புது தேதி குறித்து அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!
பராசக்தி படத்தின் திரையரங்க ரிலீஸ் குறித்து சுதா கொங்கரா பேசிய விஷயம்:
பேசிய சுதா கொங்கரா, “எனது இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் (சூரரைப் போற்று) நேரடியாக ஓடிடியில் வெளியானது. அது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்து. அந்த படத்திற்கு தியேட்டர் ரிலீஸ் நடக்காதபோது, பராசக்தி படத்திற்கான வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். இந்த படத்திற்காக எனக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது, அதில் இந்த படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும், ஓடிடியில் இல்லை என தெரிந்தபிறகே கையெழுத்திட்டேன்.
இதையும் படிங்க: ‘ரயாவாக யாஷ்’… அதிரடி காட்சிகளுடன் வெளியானது ‘டாக்சிக்’ திரைப்படத்தின் அறிமுக வீடியோ!
சூரரைப் போற்று படத்தின் கதை எழுத 2 மாதம் ஸ்கிரிப்ட் ரெடியாக 3 மாதம் மேலும் அந்த படத்தின் பின்னணி வேலைக்காக கிட்டத்தட்ட 10 வருடங்களாக உழைத்திருக்கிறேன். இந்நிலையில் அந்த படமானது நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. இதுபோன்ற தவறை மீண்டும் பண்ணக்கூடாது என நினைத்தேன், அப்படி வந்ததுதான் பராசக்தி” என அதில் வெளிப்படையாக அவர் கூறியிருந்தார்.
சூரரைப் போற்று படத்தின் தவறுகள் குறித்து சுதா கொங்கரா பேசிய வீடியோ:
“After #SooraraiPottru went to OTT, I made in #Parasakthi‘s agreement that it should release only release in theatres. For me my film should win. When #Parasakthi was supposed to come for Diwali, #JanaNayagan annocened Diwali, so we pushed”
– #SudhaKongarapic.twitter.com/UDXfs5vVTe— AmuthaBharathi (@CinemaWithAB) January 7, 2026
இயக்குநர் சுதா கொங்கராவின் நடிப்பில் இந்த பராசக்தி படமானது வரும் 2026 ஜனவரி 10ம் தேதி முதல் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஒரு நாள் முன் ஜன நாயகன் படம் வெளியாகவிருந்த நிலையில், சென்சார் பிரச்னையின் காரணமாக இப்படம் ரிலீஸ் தள்ளிப்போனது. மேலும் இந்த பராசக்தி படத்திற்கும் இன்னும் சென்சார் கொடுக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், இன்று 2026 ஜனவரி 8ம் தேதியில் வெளியாகும் என்றும், அல்லது இப்படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.