Toxic Movie: ‘ரயாவாக யாஷ்’… அதிரடி காட்சிகளுடன் வெளியானது ‘டாக்சிக்’ திரைப்படத்தின் அறிமுக வீடியோ!
Yashs Toxic Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் யாஷ். இவரின் நடிப்பில் ஹாலிவுட் பட ரேஞ்சில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் டாக்சிக். இந்த படத்தின் யாஷ் கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
கன்னட சினிமாவின் மூலம் கதாநாயகனாக நுழைந்து தற்போது பான் இந்திய அளவிற்கு மிகவும் பிரபலமான ஒருவராக இருந்துவருபவர்தான் ராக்ஸ்டார் யாஷ் (Yash). இவரின் நடிப்பில் தென்னிந்திய சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. அதில் அனைவரிடமும் இவருக்கு பிரபலத்தை கொடுத்த திரைப்படம்தான் கே.ஜி.எஃப் (KGF). கடந்த 2018ம் ஆண்டில் வெளியான இந்த கன்னட திரைப்படத்தின் மூலமாக யாஷ் மக்களிடையே பிரபலமானார். அதையடுத்து கே.ஜி.எஃப் பார்ட் 2 படத்திலும் நடித்து ஹிட் கொடுத்திருந்தார். இந்த படங்களின் வரிசையில் இவருக்கு ஹாலிவுட் படத்தைப் போல தயாராகிவருவதுதான் டாக்சிக் : எ ஃபேரி டைல் ஃபார் க்ரோவுன்- அப்ஸ் (Toxic: A Fairy Tale for Grown-Ups). இந்த படமானது சுமார் 7 மொழிகளில் உருவாகியுள்ள நிலையில், வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அந்த வகையில் நடிகர் யாஷ் இன்று 2026 ஜனவரி 8ம் தேதியில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்திலிருந்து அவரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் மற்றும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் யாஷ் “ரயா” (Raya)என்ற வேடத்தில் நடித்துள்ளாராம். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.




இதையும் படிங்க: ஸ்டாண்ட் வித் விஜய் அண்ணா… இணையத்தில் வைரலாகும் ரவி மோகனின் பதிவு
டாக்சிக் படக்குழு வெளியிட்ட யாஷின் டாக்சிக் பட அறிமுக வீடியோ பதிவு:
RAYA
Toxic : A Fairy Tale for Grown-Ups in cinemas worldwide on 19-03-2026#ToxicTheMovie pic.twitter.com/fpSdI8utAv
— Yash (@TheNameIsYash) January 8, 2026
டாக்சிக் படத்தின் பட்ஜெட் என்ன :
இந்த டாக்சிக் படத்தில் நடிகர் யாஷ் கதாநாயகனாக மட்டுமில்லாமல், கதை எழுத்தாளராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இதில் யாஷுடன் நடிகர்கள் டோவினோ தாமஸ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா, ஹுமா குரேஷி மற்றும் ருக்மிணி வசந்த் என பான் இந்திய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். ஆக மொத்தத்தில் இப்படம் பான் இந்திய படமாக மட்டுமில்லாமல், ஹாலிவுட் படம் போல மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது.
இதையும் படிங்க: ‘ஜனநாயகன்’ ரிலீஸ் இல்லை.. ரத்தான முன்பதிவு.. புது தேதி குறித்து அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!
இதை இயக்குநர் கீத்து மோகன் தாஸ் இயக்கியுள்ள நிலையில், இதில் பல ஹாலிவுட் கலைஞர்களும் பணியாற்றியுள்ளனர். அதன்படி இப்படம் சுமார் ரூ 650 முதல் 700 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 2 மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துவருகிறது. நிச்சயமாக இப்படம் கிட்டத்தட்ட ரூ 1500 கோடிகளுக்கு மேல் இந்தியாவில் மட்டும் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.