ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது நானியின் தி பாரடைஸ் படத்திலிருந்து வெளியான ஆயா ஷெர் பாடல்
Aaya Sher Song Lyrical Video | தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் நானி. இவரது நடிப்பில் உருவாகி வரும் தி பாரடைஸ் படத்திலிருந்து முன்னதாகா வெளியான ஆயா ஷெர் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுகுமார். இவரிடம் உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் ஸ்ரீகாந்த் ஒடேலா. இவர் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியான தசரா என்ற படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். ஆக்ஷன் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் நானி நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார் ஸ்ரீகாந்த் ஒடேலா.
இந்த நிலையில் அடுத்ததாக இயக்குநர் ஸ்ரீ காந்த் ஒடேலா எந்த நடிகரை வைத்து படம் இயக்குவார் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் மீண்டும் நடிகர் நானி உடன் கூட்டணி வைத்தார். இந்த கூட்டணி தொடர்பான அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இவர்கள் இருவரும் இரண்டாது முறையாக கூட்டணி வைத்த இந்தப் படத்திற்கு தி பாரடைஸ் என்று பெயர் வைத்தனர். பீரியட் ட்ராமாவாக உருவாகி வரும் இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது ஆயா ஷெர் பாடல்:
இந்த நிலையில் இந்த தி பாரடைஸ் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் நானியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயா ஷெர் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது. மேலும் இந்தப் பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் வித் லவ் படம்? வைரலாகும் தகவல்
தி பாரடைஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Jadal’s uNANImous domination worldwide 💥💥#AayaSher 🦁 TRENDING TOP on global music charts 🔥
▶️ https://t.co/1nhHPmgpTG#TheParadise GRAND RELEASE WORLDWIDE ON AUGUST 21st, 2026 ❤🔥#JadalZamanaFromAug21Natural Star @NameisNani in an @odela_srikanth cinema ❤️🔥
An… pic.twitter.com/9kSnIn3vRL— SLV Cinemas (@SLVCinemasOffl) February 26, 2026
Also Read… யாசின் டாக்ஸிக் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனங்கள்