AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் வித் லவ் படம்? வைரலாகும் தகவல்

With Love Movie OTT Update: தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் வித் லவ். இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் வித் லவ் படம்? வைரலாகும் தகவல்
வித் லவ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Feb 2026 13:21 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக இளம் தலைமுறையினரின் கூட்டணியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வரிசையில் இடம் பிடித்ததுதான் வித் லவ் படம். இந்தப் படத்தை இயக்குநர் மதன் எழுதி இயக்கி இருந்தார். இவர் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநரகா அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முன்னதாக அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகம் ஆனார். இவரது இயக்கத்தில் வெளியான முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்குவார் என்று மக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனார்.

அதன்படி அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகம் ஆன இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து படத்தில் பிரபலங்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் வித் லவ் படம்?

சௌந்தர்யா ரஜினிகாந்தின் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியனா நிலையில் தற்போது ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது படம் வருகின்ற மார்ச் மாதம் 6-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… யூத் படத்திற்காக ஜிவி பிரகாஷ் செய்த செயல் – நெகிழ்ந்து பேசிய கென் கருணாஸ்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இணையத்தில் வைரலாகும் சூரியின் மண்டாட்டி படத்தின் ஷூட்டிங் அப்டேட்

Follow Us