பர்த்டே பாய் நானியின் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ஹாய் நானா படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
Nani's Hi Nanna Movie OTT Update: நடிகர் நானியின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அவரது நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ஹாய் நானா படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை காண்போம்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் தொடர்ந்து ஒரே மாதிரியான படங்களில் நடிக்காமல் வெர்சடைலான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதன் காரணமாக நடிகர் நானியை ரசிகர்கள் நேச்சுரல் ஸ்டார் என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று 24-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு தனது 42-வது பிறந்த நாளை நடிகர் நானி கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் நானியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் அடித்த படமான ஹாய் நானா படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
இயக்குநர் ஷௌரியுவ் எழுதி இயக்கி கடந்த டிசம்பர் மாதம் 7-ம் தேதி 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஹாய் நானா. அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இதில் நடிகை மிருணாள் தாக்கூர் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
ஹாய் நானா படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
நடிகர் நானி தனது 6 வயது மகள் மற்றும் மாமனார் உடன் மும்பையில் வாழ்ந்து வருகிறார். நானியின் மகள் கியாரா கண்ணாவிற்கு சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் என்ற நோய் உள்ளது. இந்த நோயால் அந்த சிறுமி பாதிக்கப்பட்டு இருந்தாலு அவரை சிங்கிள் ஃபாதராக அவரை முடிந்தவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்கிறார் நானி.
Also Read… D55 Movie: தனுஷின் ‘டி55’ படத்தின் கதைக்களம் இதுவா? – ரசிகர்களை ஈர்க்கும் தகவல்!
இப்படி இருக்கும் சூழலில் அவரது மனைவி மிருணாள் தாக்கூரை எதிர்பாராத விதமாக சந்திக்கின்றனர். ஆனால் மிருணாள் தாக்கூருக்கு ஒரு விபத்தில் திருமணம் ஆனதும் குழந்தை இருப்பதும் மறந்துவிடுகிறது. அந்த குழந்தைக்கும் அவர்தான் அம்மா என்பதும் தெரியவில்லை. அனைத்தும் தெரிந்த நானியும் எதுவும் தெரியாதமாதிரியே இருக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் அவர்களின் குடும்பம் ஒன்றினைந்ததா இல்லையா? குழந்தையின் நோய் எப்படி சரியானது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… தலைவர் 173 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்… இயக்குநர் சொன்ன அப்டேட்!



