AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கல்கி 2 படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த நடிகர் கமல் ஹாசன்… வைரலாகும் போட்டோ!

Kamal Haasan In Kalki 2 Movie: உலக நாயகன் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் பணிகள் பிசியாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் கமல் ஹாசன் தற்போது கல்கி பாகம் 2 படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளது வைரலாகி வருகின்றது.

கல்கி 2 படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த நடிகர் கமல் ஹாசன்… வைரலாகும் போட்டோ!
கமல் ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Feb 2026 12:59 PM IST

சினிமா ரசிகர்களால் உலக நாயகன் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் கமல் ஹாசன். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் தெலுங்கு சினிமாவில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகளில் கலந்துகொண்டுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கல்கி 2898 ஏடி படம்.

நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தை இயக்குநர் நாக் அஸ்வின் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடிகர்கள் அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி, பிரம்மானந்தம்,
ராஜேந்திர பிரசாத், ஷோபனா, பசுபதி, அனில் ஜார்ஜ், சாஸ்வத சட்டர்ஜி, அன்னா பென் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கல்கி 2 படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த நடிகர் கமல் ஹாசன்:

இந்த நிலையில் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர்கள் அனைவரும் பிசியாக நடித்து வரும் நிலையில் தற்போது நடிகர் கமல் ஹாசன் படப்பிடிப்பில் இணைந்துள்ளது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. முன்னதாக இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து இருந்த நிலையில் தற்போது கமல் ஹாசனும் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… Venkat Prabhu: ‘பார்ப்பதற்கே பிரம்மிப்பாக இருந்தது’ – அஜித் குமாரின் ரேஸ் அனுபவத்தை பகிர்ந்த வெங்கட் பிரபு!

இணையத்தில் வைரலாகும் கமல் ஹாசனின் புகைப்படம்:

Also Read… அழகிய லைலா… சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ரம்பா – வைரலாகும் செய்தி