காமெடி மட்டும் இல்ல… கருத்தும் இருக்கு – ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படத்தை கண்டிப்பா பாருங்க
Thalaivar Thambi Thalaimaiyil Movie OTT Update: நடிகர் ஜீவா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் தலைவர் தம்பி தலைமையில். இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்துப் தற்போது இந்த செய்தியில் பார்ப்போம்.
நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றே சொல்லலாம். இவரது நடிப்பில் வெளியாகும் பலப் படங்கள் தற்போதையை ட்ரெண்டில் இளைஞர்களை கவரும் வகையில் காமெடியும் கலாய்களும் நிறைந்து காணப்படும். இந்த நிலையில் நடிகர் ஜீவாவின் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் தலைவர் தம்பி தலைமையில். பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ஜீவா அந்த ஊரில் இரு குடும்பங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனையில் சிக்கி எப்படி சின்னாபின்னமாகிறார் என்பதே படத்தின் கதை. இந்த தலைவர் தம்பி தலைமையில் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஜீவா உடன் இணைந்து நடிகர்கள் இளவரசு, தம்பி ராமையா, பிராத்தன நாதன், சாய் விக்னேஷ், ஜென்சன் திவாகர், ஜெய்வந்த், சுபாஷ் கண்ணன், ராஜேஷ் பாண்டியன், அனுராஜ் ஓ.பி. சர்ஜின் குமார், சரத், ஷஜீர் பி. பஷீர், அமித் மோகன் ராஜேஸ்வரி, சஸ்தி பிரனேஷ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
Also Read… தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்
தலைவர் தம்பி தலைமையில் படத்தின் கதை என்ன?
நடிகர் ஜீவா கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார். ஊரில் நடக்கும் எல்லா நல்லது கெட்டது அனைத்திற்கு ஜீவா முன்பு நின்று அனைத்துக் காரியங்களையும் கவனித்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கும் இளவரசு மற்றும் தம்பி ராமையா இருவரும் தீரா பகையில் இருக்கிறார்கள். இவர்கள் இருவர் வீட்டில் இளவரசு வீட்டில் அவரது மகளுக்கு திருமணம் நடைபெற இருந்த நாளிற்கு முந்தைய நாள் தம்பி ராமையாவின் தந்தை உயிரிழந்து விடுகிறார். திருமணமும் துக்கமும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருக்க அவர்களின் பகையுணர்வு காரணமாக அந்த பிரச்சனை இன்னும் அதிகமாகிறது. இதனை ஜீவா எப்படி சமாளித்து பிரச்சனையை முடித்து வைத்தார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… சூர்யா 46 படத்தின் கிளிம்ஸ் வீடியோ எப்போது வெளியாகும்? வைரலாகும் தகவல்



