‘ஜனநாயகன்’ ரிலீஸ் இல்லை.. ரத்தான முன்பதிவு.. புது தேதி குறித்து அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!
Jananayagan movie officially postponed: முன்பதிவு பணிகளும் தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் தொடங்கி முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. இப்படி ஒரு சூழ்நிலையில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, முன்பதிவுக்கான டிக்கெட்டை திரும்பித்தரும் பணியில் திரையரங்குகள் ஈடுபட்டுள்ளன.
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் இதுவரை கிடைக்காத நிலையில், ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளை (ஜன.9ம் தேதி) உலகம் முழுவதும் இப்படம் வெளியாக இருந்தது. இதற்கான முன்பதிவு பணிகளும் தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் தொடங்கி முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. இப்படி ஒரு சூழ்நிலையில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. படத்திற்கான தணிக்கை சான்று ஜனவரி 6ம் தேதி வரை கிடைக்காததோடு, அதுகுறித்து எந்த தகவலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், ஜனவரி 7ம் தேதி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. எனினும், அன்றைய தினம் தணிக்கு குழு பதிலளிக்க கூறி வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது. தொடர்ந்து, நேற்றைய தினம் (ஜன.7) வழக்கு விசாரணை நடந்த நிலையில், ஜன.9ம் தேதி தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
இதையும் படிக்க: ஜனநாயகனைத் தொடர்ந்து பராசக்தி வெளியாவதிலும் சிக்கல் – ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு?
ஜனநாயகன் அதிகாரப்பூர்வமாக ஒத்திவைப்பு:
— KVN Productions (@KvnProductions) January 7, 2026
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ஜனவரி 9 அன்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு, எங்களால் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய வெளியீட்டுத் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளது. அதுவரை, உங்கள் பொறுமையையும் தொடர்ச்சியான அன்பையும், ஆதரவையும் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையே, ரிலீஸ் ஒத்திவைப்பால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை:
முன்னதாக, நேற்றைய தினம் (ஜன.7) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், கடந்த டிசம்பர் 19ம் தேதியே திரைப்படம் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி விட்டதாகவும், அவர்கள் சொன்ன மாற்றங்களை செய்தப் பிறகும், இதுவரை தணிக்கை குழு படத்திற்குச் சான்றிதழ் அளிக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதேசமயம், மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஜனநாயகன் படத்தில் ராணுவ படைகளின் இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளதால், அத்துறை நிபுணரிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். சென்சார் பரிசீலனைக் குழுவில் இடம்பெறாத உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய குழுவால் ஜனநாயகன் படம் மறுபடி பார்க்கப்பட வேண்டும். இதுகுறித்து ஜனவரி 5ம் தேதியே அறிவித்துவிட்டதாகவும் தெரிவித்தது.
ரிலீஸ் தேதியை காட்டி சென்சார் கேட்க முடியாது:
சென்சார் பரிசீலனைக் குழுவில் இடம்பெறாத உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய குழுவால் ஜனநாயகன் படம் மறுபடி பார்க்கப்பட வேண்டும். ஒரு திரைப்படத்தை தணிக்கை குழு பார்வையிட்ட பிறகும், அதனை மறுதணிக்கைக்கு உத்தரவிட தணிக்கை குழு தலைவருக்கு அதிகாரம் உண்டு என்றார். முதல் தணிக்கை குழுவில் இருந்து 5 பேர் மறுதணிக்கை குழுவில் இருக்கமாட்டார்கள். வேறு ஐவர் இருப்பர். நாளை மறுதினம் படம் ரிலீஸ் எனக்கூறி சென்சார் சான்று கேட்க முடியாது. கடந்த மாதம் 18ம் தேதிதான் படக்குழு விண்ணப்பித்துள்ளது. விதிகளின் படியே நாங்கள் முடிவெடுக்க முடியும் சென்சார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க : ஜனநாயகன் படத்துக்கு சென்சாரில் ஏற்பட்ட குழப்பம் இவைதான்.. சிக்கல்களை அடுக்கிய வழக்கறிஞர்!
வழக்கில் ஜன.9ம் தேதி தீர்ப்பு:
டிசம்பர் மாதம் 18ம் தேதியே தட்கல் முறையில் தணிக்கை சான்றுக்கு விண்ணப்பித்தும், ஒரு வாரத்தில் தர வேண்டிய சான்று கிடைக்கவில்லை. 5 பேர் கொண்ட குழுவில் பெரும்பான்மையானோர் சான்று வழங்க ஒப்புக்கொண்ட நிலையில் ஒருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதை கருத்தில் கொள்ளக்கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கில் நாளை (ஜனவரி 9ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.