தளபதி விஜய்யின் ஜனநாயகன் ரீலீஸ் தள்ளிவைப்பு – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
தளபதி விஜய்யின் ஜனநாயகன் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு, ஜனவரி 9, 2026 அன்று வழங்கப்படுகிறது. இதனையடுத்து படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தளபதி விஜய்யின் ஜனநாயகன் (Jananayagan) ஜனவரி 9, 2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு, ஜனவரி 9, 2026 அன்று வழங்கப்படுகிறது. இதனையடுத்து படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தப் படத்தை மலேசியாவில் (Malaysia)வெளியிடும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பரேசன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் தான் ஜன நாயகன் பட இசை வெளியீட்டு விழாவை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜனநாயகன் பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இது தொடர்பாக மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், எதிர்பாராத காரணங்களால், 2026 ஜனவரி 9 அன்று வெளியாக இருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதி உறுதியானவுடன், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எங்கள் அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் மூலம் வெளியிடப்படும். இதற்கிடையில், ரசிகர்கள் அனைவரும் பொறுமையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதையும் படிக்க : ஜனநாயகன் படத்துக்கு சென்சாரில் ஏற்பட்ட குழப்பம் இவைதான்.. சிக்கல்களை அடுக்கிய வழக்கறிஞர்!
அதிகாரப்பூர்வமற்ற தவறான அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர்வதை தவிர்க்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறோம். தற்போது வெளியீட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் உங்கள் புரிதலும் ஒத்துழைப்பும் எங்களுக்கு மிகவும் அவசியம். தொடர்ந்து நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு மனப்பூர்வமான நன்றி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான அறிவிப்பு
‼️OFFICIAL ANNOUNCEMENT‼️@KvnProductions @PharsFilm #MalikStreams #DAM #JanaNayagan #ThalapathyVijay pic.twitter.com/w3aFeYL0W5
— Malik Streams Corporation (@malikstreams) January 7, 2026
ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சென்சார் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை, ஜனவரி 9, 2026 அன்று வழங்குவதாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : Sreeleela: நான் முழு மனதோடு ஆதரிப்பேன் – ஜன நாயகன் படம் குறித்து பேசிய ஸ்ரீலீலா!
ஜனநாயகன் படம் தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தை காண அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக காத்திருந்தனர். இந்த அறிவிப்பு அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அவர் முழு நேர அரசியலில் இறங்கியுள்ளார்.