Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்சார் வழக்கில் ஜனவரி 9 அன்று தீர்ப்பு – தள்ளிப்போகும் ஜனநாயகன் படம்?

Jananayagan Censor Case: ஜனநாயகன் பட சென்சார் தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9, 202 அன்று ஒத்திவைத்தார். இதனையடுத்து அன்றைய தினம் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்சார் வழக்கில் ஜனவரி 9 அன்று தீர்ப்பு – தள்ளிப்போகும் ஜனநாயகன் படம்?
தளபதி விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 Jan 2026 18:20 PM IST

ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் (Jananayagan) படத்தின் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாதது குறித்து சர்ச்சையான நிலையில் தயாரிப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜனவரி 7, 2026 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சென்சார் போர்டு தரப்பில் மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தன் தரப்பு வாதங்களை முன் வைத்தார். இதனை கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9, 202 அன்று ஒத்திவைத்தார். அன்றைய தினம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் என்ன சிக்கல்?

தணிக்கைத்துறை சார்பாக ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், ஜனநாயகன் படத்தில் இந்திய ராணுவம் சம்மந்தமான சீருடை, இலட்சினை உள்ளிட்ட அடையாளங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது தொடர்பாக முன்பே அது தொடர்பான மேலதிக ஆலோசனைகளுக்கு ரிவ்யூ கமிட்டிக்கு அனுப்பி இருக்கிறோம் என்று பேசியிருக்கிறார். இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி விதிகளின் அடிப்படையில் பரிசீலித்து முடிவெடுக்க மட்டுமே சென்சார் போர்டுக்கு உத்தரவிட முடியும். தணிக்கை வாரியத்தின் டைம்லைனை பின்பற்றித்தான் ஆக வேண்டும் எனக் கூறி வழக்கின் தீர்ப்பை வருகிற ஜனவரி 9, 2026 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இதையும் படிக்க : Parasakthi: சார்ட் டைம் ஹிட்… யூடியூப்பில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்த பராசக்தி பட ட்ரெய்லர்!

தள்ளிப்போகிறதா ஜனநாயகன்?

ஜனநாயகன் படத்தின் சென்சார் தொடர்பான வழக்கின் தீப்பு ஜனவரி 9, 2026 அன்று வழங்கப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. படம் பெரும்பாலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தளபதி விஜய் ரசிகர்கள் தங்களின் வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர். புதிய ரிலீஸ் தேதி ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : Sreeleela: நான் முழு மனதோடு ஆதரிப்பேன் – ஜன நாயகன் படம் குறித்து பேசிய ஸ்ரீலீலா!

தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்தப் படத்தை அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்த நிலையில் தான் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அவர் அதன் பிறகு அவர் முழு நேர அரசியல்வாதியாக செயலாற்றவிருக்கிறார்.  தெலுங்கில் வெற்றிபெற்ற பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என கூறப்படும் நிலையில், ஹெச்.வினோத் கூடுதலாக அரசியல் சம்மந்தப்பட்ட காட்சிகளையும் படத்தில் இணைத்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.