Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பராசக்திக்கு 450 திரையரங்குகள் ஒதுக்கீடு.. ஜன நாயகன் படத்திற்கு எத்தனை தெரியுமா?

Jana Nayagan VS Parasakthi Theatre Allocation: 2026ம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிக பிரம்மாண்டமாக வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படங்கள்தான் ஜன நாயகன் மற்றும் பராசக்தி. இந்த திரைப்படங்கள் ஒன்றின்பின் ஒன்றாக வெளியாகவுள்ள நிலையில், இதற்க்கு தமிழகத்தில் மொத்தம் எத்தனை திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பொது செயலாளர் கூறியுள்ளார்.

பராசக்திக்கு 450 திரையரங்குகள் ஒதுக்கீடு.. ஜன நாயகன் படத்திற்கு எத்தனை தெரியுமா?
ஜன நாயகன் மற்றும் பராசக்திImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Jan 2026 16:57 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள நிலையில், கே.வின்.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே (Pooja Hegde), பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன், பிரியாமணி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2026 ஜனவரி 9ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த விதத்தில் இந்த பட ரிலீசிற்கு மறுநாள் ஜனவரி 10ம் தேதியில் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) பராசக்தி (Parasakthi) படமானது மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதில் ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது தமிழ் மொழியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிற்து. மேலும் இந்த இரு படங்களுக்கும் இடையே திரையரங்கு எண்ணிக்கை பற்றாக்குறை இருந்துவந்த நிலையில், இந்த இரு படங்களுக்கும் தமிழகத்தில் மொத்தம் எத்தனை திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஆக்ஷன் கதாநாயகியாக சமந்தா.. வெளியானது ‘மா இன்டி பங்காரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

ஜன நாயகன் மற்றும் பராசக்தி படங்களுக்கு தமிழக திரையரங்கு ஒதுக்கீடு :

தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிரார்ப்புகள் இருந்துவருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஜன நாயகன் திரைப்படத்திற்கு மொத்தமாக 650 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கு மொத்தமாக 450 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் என்பவர் தெரிவித்துள்ளார். இப்படங்களில் தளபதி விஜய்யின் ஜன நாயகன் படம் ரிலீஸ் செய்யப்படும் திரையரங்குகளின் முதல் நாள் டிக்கெட் முன்பதிவுகள் முழுவதுமாக நிரம்பியுள்ளதாகவும் வட்டாரங்கள் கூறுகிறது.

ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

இந்த ஜன நாயகன் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பல்வேறு இடங்களில் ப்ரீ-புக்கிங் தொடங்கி முழுமையாக முடிந்துள்ளது. அந்த விதத்தில் படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த பிரச்சனை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: நான் முழு மனதோடு ஆதரிப்பேன் – ஜன நாயகன் படம் குறித்து பேசிய ஸ்ரீலீலா!

படக்குழு முன்னதாகவே சென்சார் குழுவை அணுகியும், பல நாட்களாக பதிலளிக்காத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது. இந்த தீர்ப்பிலே ஜன நாயகன் படம் 2026 ஜனவரி 9ம் தேதியில் வெளியாகிறதா? அல்லது இல்லையா? என்பது முழுமையாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.