Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜாய் கிரிசில்டாவிற்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கு – அதிரடி உத்தரவை கொடுத்த உயர்நீதிமன்றம்!

Madhampatty Rangaraj & Joy Crizildaa: பிரபலமான தமிழ் சமையல் கலைஞராக இருந்துவருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் கடந்த 2024ல் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்ட்டா என்பவரை திருமணம் செய்திருந்தார். மேலும் இவர்கள் இருவருக்குள்ளும் பிரிவு ஏற்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. அதில் மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஜாய் கிரிசில்டாவிற்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கு – அதிரடி உத்தரவை கொடுத்த உயர்நீதிமன்றம்!
ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 07 Jan 2026 12:15 PM IST

தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான சமையல் கலைஞராக இருந்துவருபவர் செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj). இவர் தமிழ் சினிமாவில் ‘மெகந்தி சர்க்கர்ஸ்’ (Mehandi Circus) என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக நுழைந்தார். இந்த படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான இவர் தொடர்ந்து பென்குயின் போன்ற படங்ககளிலும் நடித்து பிரபலமாகியிருந்தார். அந்த வகையில் தற்போது தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி (Cook with Comali) என்ற ஷோவில் நடுவராகவும் பணியாற்றிவருகிறார். அந்த வகையில் இவர், கடந்த 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆடை வடிவைமைப்பாளரான ஜாய் கிரிசில்டா (Joy Crizildaa) என்பவரை காதலித்து 2வது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஏற்கனவே கிருத்திகா என்ற முதல் மனைவி இருந்த நிலையில், அவருடன் விவாகரத்து பெறாமலே 2வது திருமணம் செய்துகொண்டார். ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ், தங்கள் கர்ப்பமாக இருப்பதையும் சில வாரங்ககளிலே அறிவித்த நிலையில் சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின் இவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், ஜாய் கிரிசில்டாவை மாதம்பட்டி பிரிந்து வாழ்ந்தார்.

இதற்கான சரியான காரணத்தை மாதம்பட்டி ரங்கராஜ் கூறவில்லை, என ஜாய் கிரிசில்டா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுவரை பலமுறை விசாரணையும் நடந்துள்ளது. அந்த வகையில் ஜாய் கிரிசில்டா தனக்கு எதிரான தகவல்களை இணையத்தில் பரப்புகிறார் என்று மாதம்படி ரங்கராஜ் தரப்பில் மனு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அதை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதையும் படிங்க: 2026-ம் ஆண்டில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் நீங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் எது?

மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து ஜாய் கிரிசில்டா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by J Joy (@joycrizildaa)

மாதம்பட்டி ரங்கராஜ் அளித்த மனுவில், ஜாய் கிரிசில்டா தன்னை பற்றிய அவதூறுப்பரப்புவதாக மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அதை தள்ளுபடி செய்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட நிலையில், மக்களிடையே பேசப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ பட ஷூட்டிங் நிறைவு.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவருக்கும் சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்ததை கூட மாதம்பட்டி ரங்கக்கராஜ் சென்று பார்க்கவில்லை. மேலும் இவர் இந்த குழந்தை தனது குழந்தைதான் என்பதற்கு சரியான ஆதாரம் வேண்டும் மற்றும் டிஎன்ஏ பரிசோதனை செய்யவேண்டும் . அப்படி டிஎன்ஏ பரிசோதனையில் தனது குழந்தைதான் என தெரியவந்தால் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்கிறேன் என கூறியிருந்தார்.

ஆனாலும் இவர் தற்போதுவரை அந்த டிஎன்ஏ பரிசோதனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து சமீபகாலமாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவும் இன்ஸ்டாகிராமில் பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.