தேரே இஷ்க் மே இயக்குநருடன் மீண்டும் இணையும் தனுஷ்?
Anand L Rai And Dhanush Reunion: தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ். இவருக்கு இந்தி சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துவரும் இயக்குநர்தான் ஆனந்த் எல். ராய். இவர்களின் கூட்டணியில் இறுதியாக தேரே இஷ்க் மே படம் வெளியான நிலையில், மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாம்.
நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் இறுதியாக வெளியான மிக பிரம்மாண்ட வெற்றியை பெற்ற திரைப்படம்தான் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இந்த திரைப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க, இந்தி நடிகை க்ரிதி சனோன் (Kriti Sanon) கதாநாயகியாக நடித்திருந்தார். அதிரடி காதல் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியான இப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் (Anand L Rai) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான ராஞ்சனா (Raanjhanaa) என்ற படத்தின் மூலமாகத்தான் முதல் முறையாக நடிகர் தனுஷ் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் இவருக்கு மிக பெரிய வரவேற்பை கொடுக்க, அத்ரங்கி ரே என்ற படத்தின் மூலமாக 2வது முறையாக இணைந்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த கூட்டணியில் பின் 3வது வெளியான படம் தேரே இஷ்க் மே.
இப்படமானது 2025 நவம்பர் இறுதியில் வெளியாகி பான் இந்திய வரவேற்பையும் பெற்றிருந்தது. வகையில் தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய் கூட்டணி 4வது முறையாக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இப்படமானது மிக பெரிய பட்ஜெட், காலகட்ட காதல் திரைப்படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.




இதையும் படிங்க: ஜன நாயகன் பட சென்சார் பிரச்சனை.. வழக்கை நாளைக்கு ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்!
தனுஷின் தேரே இஷ்க் மே படம் குறித்து இயக்குநர் ஆனந்த் எல் ராய் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
We fall in love by chance, we stay in love by choice.❤️🔥#TereIshkMein running successfully in cinemas near you, in Hindi, Tamil and Telugu. Grateful for the love🙏🏼@dhanushkraja @kritisanon @arrahman @aanandlrai #BhushanKumar #HimanshuSharma #KrishanKumar @Irshad_kamil… pic.twitter.com/9giY9ntMG2
— Aanand L Rai (@aanandlrai) December 6, 2025
தனுஷின் நடிப்பில் உருவாகும் புது படங்கள் :
நடிகர் தனுஷின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் பல படங்கள் தயாராகிவருகிறது. அதில் இவர் இயக்குநர் விக்னேஷ் ராஜாவுடன் கைகோர்த்த டி54 படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ளார். இதை அடுத்தாக தமிழில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் டி55 படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் இயக்குநர் மாரி செல்வராஜின் கூட்டணியில் டி56 படத்தில் நடிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: பிக்பாஸில் செலிபிரேஷன் வாரத்தில் வீட்டிற்குள் வந்த திவாகர் செய்த செயல் – வார்னிங் கொடுத்த பிக்பாஸ்
இந்த படமானது ஒரு வரலாற்று கதைக்களம் கொண்ட திரைப்படமாக தயாராகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துவருகிறார். இதையடுத்து அப்துலகாம் பயோபிக், இளையராஜா பயோபிக், லப்பர் பந்து பட இயக்குனருடன் புது படம் என கிட்டத்தட்ட 8 படங்களுக்கும் மேல் தனது கைவசத்தில் தனுஷ் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.