2026-ம் ஆண்டில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் நீங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் எது?
Actor Karthi: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. சினிமா குடும்பத்தில் இருந்து வந்து இருந்தாலும் தனது கடின உழைப்பால் சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். இவரது நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் 3 படங்கள் வெளியாக காத்திருக்கின்றது.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் இளைய மகனாகவும் நடிகர் சூர்யாவின் தம்பியகாவும் அறிமுகம் ஆனவர் தான் நடிகர் கார்த்தி. இவர் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் பிரபல இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். ஆனால் இயக்குநர் ஆசையில் இருந்து விலகி நடிகராக மாறினார். அதன்படி இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் கார்த்தி. முரட்டு கிராமத்து இளைஞனாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆன கார்த்தி தொடர்ந்து அனைத்து விதமான கதாப்பாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறத் தொடங்கினார். வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தனது நடிப்புத் திறமையால் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் நடிகர் கார்த்தி. அதன்படி இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்துர் அசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் இறுதியாக தமிழ் திரையுலகில் வெளியான படம் மெய்யழகன். ஃபீல் குட் படமாக வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த 2025-ம் ஆண்டில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வா வாத்தியார் படம் வெளியாக இருந்தது. ஆனால் பணப் பிரச்னை காரணமாக படத்தின் வெளியீடு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.




இந்த 2026-ல் கார்த்தியின் எந்த படத்திற்கு நீங்க வெய்டிங்?
இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அதன்படி பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வா வாத்தியார் படமும், கோடை விடுமுறையில் சர்தார் 2 படமும் தீபாவளி பண்டிகையின் போது நடிகர் கார்த்தியின் நடிப்பில் மார்ஷல் படமும் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.
Also Read… 3 நாளில் ஜனநாயகன் ரிலீஸ்.. கோர்ட் படியேறிய விஜய் தரப்பு.. தொடரும் சென்சார் பிரச்னை!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Karthi is going to have 3 films released this year.
— #VaaVaathiyaar – Feb or March
— #Sardar2 – Summer 🏝️
— #Marshal – Diwali 🪔Which of these three films are you eagerly waiting for…..? pic.twitter.com/tkpSbjITos
— Movie Tamil (@_MovieTamil) January 4, 2026