பராசக்தி படத்தில் அந்த பிரபல மலையாள நடிகர்… உறுதி செய்த சிவகார்த்திகேயன்!
Actor Sivakarthikeyan about Malayalam Actor: தமிழ் சினிமாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பராசக்தி. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் பிரபல மலையாள நடிகர் நடித்துள்ளது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளது வைரலாகி வருகின்றது.
தமிழ் மக்கள் எந்த ஒரு பண்டிகையாக இருந்தாலும் அதனை புதுப் படங்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி இந்த பொங்கல் பண்டிகைக்கும் பிரபலங்கள் பலரின் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள பராசக்தி படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி உள்ளார். இந்தி எதிர்ப்புக் கொள்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த பராசக்தி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன், ஸ்ரீ லீலா, அதர்வா, பேசில் ஜோசஃப், ராணா டகுபதி, பிரித்வி ராஜன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இது ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளியாகும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் கேரளாவில் நடைப்பெற்ற புரமோஷன் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




பராசக்தியில் பிரபல மலையாள நடிகர்… உறுதி செய்த சிவகார்த்திகேயன்:
எனக்குப் பிடித்த நடிகரும் என் நண்பருமான பேசில் ஜோசப் இந்தத் திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். நான் அவருடன் நிறைய நேரம் செலவிட்டேன், மேலும் அவருடைய படப்பிடிப்பு முடிந்த பிறகும், அவர் நான்கு நாட்கள் இலங்கையிலேயே தங்கியிருந்தார் என்று சிவகார்த்திகேயன் வெளிப்படையாக பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Suriya: தனது குட்டி ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் கவனம் பெறும் சிவகார்த்திகேயனின் பேச்சு:
#Sivakarthikeyan Recent
– My favourite actor and my friend #BasilJoseph made a special appearance in this film 🎥✨
– I spent a lot of time with him, and after his part was over, he stayed in Sri Lanka for four days 🇱🇰#Parasakthipic.twitter.com/ycjjTWSSI0— Movie Tamil (@_MovieTamil) January 7, 2026
Also Read… ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் கொண்டாடும் சிறை படத்தின் கதை என்ன?