200 மில்லியன் பார்வைகளை கடந்தது டாக்ஸிக் படத்தில் யாஷின் அறிமுக வீடியோ
Toxic: Introducing Raya | கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் டாக்ஸிக். இந்தப் படத்தில் பல நடிகர்கள் முன்னணி வேடத்தில் நடித்துள்ள நிலையில் படம் வருகின்ற மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கன்னட சினிமாவில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ஜம்படா ஹுடுகி என்ற படத்தின் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் யாஷ். இந்தப் படத்தில் யாஷ் நாயகனாக நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து 2008-ம் ஆண்டு வெளியான ராக்கி படத்தின் மூலம் கன்னட சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் யாஷ். இந்தப் படத்தை தொடர்ந்து 2016-ம் ஆண்டு வரை இவரது நடிப்பில் வெளியான படங்கள் கன்னட சினிமாவில் உள்ள ரசிகர்களிடையே மட்டும் தான் கவனத்தை ஈர்த்து வந்தது. தொடந்து 2018-ம் ஆண்டு நடிகர் யாஷ் நடிப்பில் கன்னட சினிமாவில் வெளியான கே.ஜி.எஃப்.சாப்டர் 1 படம் கன்னட சினிமாவில் உள்ள ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகமான கே.ஜி.எஃப்.சாப்டர் 2 படம் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாவது பாகமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் யாஷ் கன்னட நடிகராக மட்டும் இன்றி பான் இந்திய அளவில் முக்கியமான நடிகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.




200 மில்லியன் பார்வைகளை கடந்தது யாஷின் அறிமுக வீடியோ:
இந்த நிலையில் நடிகர் யாஷ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் டாக்ஸிக். நடிகர் யாஷ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் கீதா மோகந்தாஸ் இயக்கி உள்ளார். மேலும் படத்தில் நடிகர் யாஷ் உடன் இணைந்து நடிகர்கள் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த், அக்ஷய் ஓபராய், நடாலி பர்ன், டாரல் டி சில்வா, சுதேவ் நாயர், அமித் திவாரி, டொவினோ தாமஸ், கைல் பால் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் யாஷ் உடன் இணைந்து நடிக்கும் நடிகர்களின் கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் நடிகர் யாஷின் கதாப்பாத்திர அறிமுக வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்த வீடியோ தற்போது யூடியூபில் 200 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
டாக்ஸிக் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
200 Million+ Views 📈
5.5 Million+ Likes ❤️
24 HOURS OF UNBRIDLED CHAOS🔥🔥🔥
DADDY IS HOME!
Toxic: A Fairy Tale for Grown-Ups in cinemas worldwide on 19-03-2026#DaddyIsHome #ToxicTheMovie@TheNameIsYash#Nayanthara@humasqureshi @advani_kiara @rukminitweets #TaraSutaria… pic.twitter.com/PjJ4BwPZjp
— KVN Productions (@KvnProductions) January 9, 2026
Also Read… பிக்பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய கானா வினோத் – எத்தனை லட்சம் தெரியுமா?