Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக்பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய கானா வினோத் – எத்தனை லட்சம் தெரியுமா?

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவது பணப்பெட்டி டாஸ்க் நடைப்பெற்றது. இதில் ஒவ்வொரு நாளும் பணப் பெட்டியில் பணம் அதிகரித்த நிலையில் பெட்டியில் இருந்த பணத்துடன் கானா வினோத் வெளியேறியதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய கானா வினோத் – எத்தனை லட்சம் தெரியுமா?
பிக்பாஸ் Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 09 Jan 2026 11:52 AM IST

தமிழ் சின்னத்திரையில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து நிகழ்ச்சி குறித்து நெகட்டிவான விமர்சனங்களே பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த 9-வது சீசனில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதைப் போல பல மாற்றங்கள் நடைப்பெற்றது. ஒரு வால்க் அவுட், இரண்டு ரெட் கார்டுகள் என்று பல விசயங்கள் இந்த நிகழ்ச்சியில் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. வைல்கார்ட் போட்டியாளர்களுடன் மொத்தம் 24 போட்டியாளர்கள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றனர். ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் டாப் 6 போட்டியாளர்களாக அரோரா, திவ்யா, சாண்ட்ரா, விக்ரம், கானா வினோத் மற்றும் சபரி ஆகியோர் உள்ளனர். இதில் யார் வெற்றியாளர் என்பது அடுத்த வார இறுதியில் தான் தெரியவரும்.

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்கள் பணப்பெட்டியில் படத்தை சேர்க்க தொடர்ந்து டாஸ்குகளை விளையாடு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வந்தனர். இதில் யார் பணப் பெட்டியைப் எடுப்பார்கள் என்பதை பார்க்க ரசிகர்களும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பிக்பாஸிலிருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்:

இந்த நிலையில் இறுதிப் போட்டியில் உள்ள 6 போட்டியாளர்களில் யாராவது ஒருவர்தான் வெற்றியாளராக இருக்க முடியும். இப்படி இருக்கும் சூழலில் யார் அந்த பெட்டியை எடுத்து புத்திசாலித்தனமாக எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறியுள்ளார். மொத்தம் 18 லட்சம் ரூபாயுடன் அவர் வெளியேறி உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Parasakthi: பராசக்தி படத்தின் வெளிநாட்டு டிக்கெட் புக்கிங் கேன்சல்.. தள்ளிபோகிறதா ரிலீஸ் தேதி?

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ரியல் லைஃப் ஸ்டோரிதான் இந்தப் படம்… அமீர்கானின் தங்கல் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?