Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jana Nayagan: பொங்கலா? குடியரசு தினமா? தளபதியின் ஜன நாயகன் பட ரிலீஸ் எப்போது இருக்கும்? விவரங்கள் இதோ!

Jana Nayagan New Release Update: 2026ம் ஆண்டில் கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த திரைப்படம்தான் ஜன நாயகன். இது தளபதி விஜய்யின் கடைசி படம் என்ற நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சென்சார் பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எப்போது ரிலீஸ் தேதி இருக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.

Jana Nayagan: பொங்கலா? குடியரசு தினமா? தளபதியின் ஜன நாயகன் பட ரிலீஸ் எப்போது இருக்கும்? விவரங்கள் இதோ!
ஜன நாயகன் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 08 Jan 2026 15:48 PM IST

தென்னிந்திய சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து தற்போது வரையிலும் அவர்களின் ஹீரோவாகவே இருந்துவருகிறார். சினிமாவில் 33 வருடங்களை கடந்த விஜய், தற்போது முழுநேர அரசியல்வாதியாக இறங்கியுள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக தயாராகியுள்ள படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது பான் இந்திய திரைப்படமாக மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள நிலையில், 2026 ஜனவரி 9ம் தேதி அன்று வெளியாகுவதாக இருந்தது. இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் இன்னும் கொடுக்கப்படாத காரணத்தாலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) இன்னும் வழக்கு நடந்துவருகிறது. இதன் தீர்ப்பு நாளை 2026 ஜனவரி 9ம் தேதியில் ஜன நாயகன் பட ரிலீஸ் தேதியன்று வழங்கப்படவுள்ளது.

இதன் காரணமாக உடனே படத்தை வெளியிட முடியாது, அந்த வகையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்துள்ளது. அதன்படி இப்படத்தின் புது ரிலீஸ் தேதி எப்போது இருக்கும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஸ்டாண்ட் வித் விஜய் அண்ணா… இணையத்தில் வைரலாகும் ரவி மோகனின் பதிவு

ஜன நாயகன் பட ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

ஜன நாயகன் திரைப்படத்தின் புது ரிலீஸ் தேதி எப்போது இருக்கும் :

இந்த ஜன நாயகன் படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என கூறப்படும் நிலையில், அதில் பாதி காட்சிகள் மட்டுமே இந்த படத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், மற்றபடி இப்படத்தில் அதிகமாக அரசியல் மற்றும் ஆக்ஷ்ன் போன்ற கதைக்களங்கள் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேடி அதிகாரப்பூர்வமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இப்படம் இந்த பொங்கலுக்குள் வெளியாகுமா? அல்லது 2026 பிப்ரவரியில்தான் வெளியாகுமா? என ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: முன்னாள் போட்டியாளர்களிடம் பிக்பாஸ் கொளுத்திப்போட்ட விசயம்… அனல் பறக்கும் வீடியோ!

மேலும் இப்படத்தின் சென்சார் குறித்த தீர்ப்பு நாளை 2026 ஜனவரி 9ம் தேதியில் காலை வழங்கப்படும் நிலையில், அது குறித்தே ரிலீஸ் தேதி உறுதியாகும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக பராசக்தி படத்தின் முதல் ரிலீஸ் தேதியான ஜனவரி 14ம் தேதியில் அல்லது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 23ம் தேதியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது இது குறித்த அறிவிப்புகள் சென்சார் சான்றிதழ் கிடைத்ததும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்திற்கு என்ன தீர்ப்பு கிடைக்கிறது என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.