Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முன்னாள் போட்டியாளர்களிடம் பிக்பாஸ் கொளுத்திப்போட்ட விசயம்… அனல் பறக்கும் வீடியோ!

Bigg Boss Tamil Season 9 : பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில் வீட்டில் பணப்பெட்டி டாஸ்க் நடைப்பெற்று வருவதுடன் முன்னாள் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செலிபிரேஷன் வாரம் என்று உள்ளே அனுப்பப்ப்டுகின்றனர்.

முன்னாள் போட்டியாளர்களிடம் பிக்பாஸ் கொளுத்திப்போட்ட விசயம்… அனல் பறக்கும் வீடியோ!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jan 2026 10:52 AM IST

தமிழ் ரசிகர்களிடையே தற்போது அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் தற்போது 95-வது நாளை எட்டியுள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சியில் இந்த 14-வது வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. அதில் இறுதிப் போட்டியாளர்கள் திவ்யா, அரோரா, சாண்ட்ரா, வினோத், சபரி மற்றும் விக்ரம் ஆகியோர் தொடர்ந்து கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பணப்பெட்டியில் பணத்தை சேகரிக்க போட்டியாளர்களே விளையாடி ஜெயிக்க வேண்டும் என்று பிக்பாஸ் புதிய ரூல் ஒன்றை போட்டுள்ளார். இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பணப்பெட்டியில் பணத்தை சேகரித்து வருகின்றனர். அந்தப் பணப்பெட்டியை யார் எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக செலிபிரேஷன் வாரம் என்று பிக்பாஸ் வீட்டில் முன்னதாக வெளியேறிய போட்டியாளர்கள் தொடர்ந்து வீட்டிற்குள் வருகின்றனர். அதில் பலர் தங்களுக்கு நடந்த மன வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக வீட்டில் சலசலப்பும் ஏற்பட்டு வருகின்றது. இதனை அதிகப்படுத்தும் விதமாக பிக்பாஸ் ஒரு டாஸ்கை வழங்கியுள்ளார்.

முன்னாள் போட்டியாளர்களிடம் பிக்பாஸ் கொளுத்திப்போட்ட விசயம்:

அதன்படி இன்று முன்னாள் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் ஒரு டாஸ்கை வழங்கியுள்ளார். அதில் இந்த வீட்டில் உங்களுக்கான நினைவுகளை பகிர வேண்டும் என்று தெரிவித்தார். அந்த டாஸ்கில் பேசிய ரம்யா ஜோ மற்றும் வியானா இருவரும் அந்த வீட்டில் தாங்கள் நம்பியவர்கள் தங்களை தவறாக பேசியது குறித்து வருத்தத்துடன் பேசியுள்ளனர். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… விஜய் வெர்ஷனில் என்னை தாலாட்டும் சங்கீதம் பாடல்… இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷின் D 56 படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்? வைரலாகும் தகவல்