சென்னையில் இன்று பிப்ரவரி 25, 2026 நான்காவது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சீரான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் கடந்த சில நாட்களாக தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூபாய் 14,930க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், விரைவில் ரூபாய் 15,000த்தை தாண்டும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். மீண்டும் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றது முதலே டொனால்ட் டிரம்ப் உலக நாடுகள் மீது வரி விதித்து வருகிறார்.