இங்கிலாந்தைச் சேர்ந்த 52 வயதான மஞ்சித் சங்கா என்ற பெண், தனது நாய் நக்கிய சிறிய காயத்தின் மூலம் ஏற்பட்ட தொற்றால் செப்சிஸ் நோய்க்கு ஆளாகி, நான்கு உறுப்புகளும் துண்டிக்கப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். 2025 ஜூலையில் உடல்நலக்குறைவுடன் வீட்டிற்கு வந்த அவர், மறுநாள் உணர்விழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.