ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும்… சிபிஎஃப்சி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Jana Nayagan Movie Censor Case: தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த படம் ஜன நாயகன். இந்தப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் படம் குறிப்பிட்ட நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நடிகர் தளபதி விஜய் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது தனது நடிப்பு வாழ்க்கையை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் களமிறங்கினார். அதன்படி தமிழகத்தில் அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய் தொடர்ந்து இனி படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தார். மேலும் தனது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ஜன நாயகன் படம் தான் தனது நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என்பதை தெரிவித்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே மட்டும் இன்றி சினிமா பிரபலங்கள் பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் இனி படங்களில் நடிக்க மாட்டார் என்ற செய்து ரசிகர்களுக்கு ஒரு பக்கம் வருத்தம் அளிப்பதாக இருந்தாலும் மறு பக்கம் நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக உருவாகி உள்ள இந்த ஜன நாயகன் படத்தின் மீது எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்பட்டது.
இந்த ஜன நாயகன் படம் தெலுங்கு சினிமாவில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று செய்திகள் பரவி வந்த நிலையில் ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் பல பகவந்த் கேசரி படத்தில் இருப்பது போலவே இருந்தது. ஆனால் விஜய் ரசிகர்களோ அது என்னவாக இருந்தாலும் அந்தப் படத்தை நிச்சயமாக பார்ப்போம் என்று தொடர்ந்து சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் படம் இன்று 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வராத காரணத்தால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதன் காரணமாக ஜன நாயகன் படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும்:
இந்த நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜன நாயகன் படம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜனநாயகன் திரைப்படத்தை மறுபரிசீலனைக்கு அனுப்ப பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கும்படி தனி நீதிபதி உத்தரவிட்ட சிறிது நேரத்திலேயே, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் மேல்முறையீட்டிற்காக தலைமை நீதிபதி அமர்வு முன்பு அவசர கோரிக்கை வைத்தார். நீதிமன்றம், “இதில் என்ன அவசரம்?” என்று கேட்டது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வழக்கின் விவரங்களை எடுத்துரைத்தார். மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துவிட்டு மீண்டும் முறையிடுமாறு நீதிமன்றம் அவரிடம் கூறி, “நீங்கள் மனுக்களைத் தாக்கல் செய்யுங்கள் நாங்கள் பரிசீலிக்கிறோம்” என்றது
Also Read… தொடர் இழுபறியில் பராசக்தி படத்தின் சென்சார் விவகாரம்… குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகுமா படம்?
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#JanaNayagan Court Verdict 🔥
• After examining materials, it is Crystal clear that the complainant’s grievance appears to be an after thought.. 💥
• entertaining such complaints would give rise to dangerous trend.. chairperson’s letter uploaded on Jan 6th is without… pic.twitter.com/AhMEEomLo4
— Laxmi Kanth (@iammoviebuff007) January 9, 2026
Also Read… தள்ளிப்போன ஜன நாயகன்… ரீ ரிலீஸாகும் தளபதி விஜயின் சூப்பர் ஹிட் படங்கள்!



