தொடர் இழுபறியில் பராசக்தி படத்தின் சென்சார் விவகாரம்… குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகுமா படம்?
Parasakthi Movie Censor Update: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் தற்போது மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் பராசக்தி. இந்தப் படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த அப்டேட் ஒன்று தற்போது சினிமா வட்டாரத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதன் காரணமாக படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் தற்போது அதிக அளவில் பேசி வருவது ஜன நாயகன் மற்றும் பராசக்தி படங்கள் குறித்துதான். நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி என இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. இதில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படம் 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாவதாக இருந்த நிலையில் படத்தின் சென்சார் தொடர்பான விசயம் இழுபறியில் இருந்த காரணத்தால் படத்திற்கு சென்சார் வழங்கவில்லை. இதன் காரணமாக படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகாமல் படத்தின் வெளியீட்டு தேதியை ஜன நாயகன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் ஜன நாயகன் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது என்ற செய்தி தமிழக மக்களிடம் மட்டும் இன்றி பிரபலங்களிடமும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதாக இருந்த பராசக்தி படத்திற்கும் இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகுமா பராசக்தி படம்?
சினிமா வட்டாரங்களில் வெளியான தகவல்களின்படி, ‘பராசக்தி’ திரைப்படத்தின் சமீபத்திய திரையிடலுக்குப் பிறகு, மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC) 23 காட்சிகளை நீக்கப் பரிந்துரைத்துள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பான சில காட்சிகளுக்கு வாரியம் ஆட்சேபனை தெரிவித்ததாகவும், அவற்றை நீக்குமாறு அல்லது மாற்றுமாறு பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்தப் பரிந்துரைகள் திரைப்படத்தின் கதை ஓட்டத்தை வெகுவாகப் பாதிக்கும் என்றும், அதன் வரலாற்றுச் சாரத்தை பலவீனப்படுத்தும் என்றும் கூறி, இயக்குநர் சுதா கொங்கரா மும்பையில் உள்ள மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் மறுஆய்வுக் குழுவை அணுகியுள்ளார். தற்போதைக்கு, படத்திற்கு இன்று சான்றிதழ் வழங்கப்படுமா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
Also Read… ஸ்டாண்ட் வித் விஜய் அண்ணா… இணையத்தில் வைரலாகும் ரவி மோகனின் பதிவு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Parasakthi – According to reports, the CBFC has suggested 23 cuts after a recent screening of the film.. 😮
• It is said that the board raised objections to certain scenes related to the anti-Hindi protests and recommended that they be removed or modified..👀
• Following… pic.twitter.com/nizdBOYiEk
— Laxmi Kanth (@iammoviebuff007) January 8, 2026
Also Read… பராசக்தி படத்தில் அந்த பிரபல மலையாள நடிகர்… உறுதி செய்த சிவகார்த்திகேயன்!