மனிதர்கள் காலடி எடுத்து வைக்க முடியாத அளவுக்கு விஷ பாம்புகளால் நிறைந்துள்ள தீவு பற்றி தெரியுமா? பிரேசிலின் தென் கிழக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 33 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தீவு, உலகம் முழுவதும் பாம்புகள் தீவு என்று அறியப்படுகிறது. இந்த தீவில் உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரு அரிய விஷப்பாம்பு இனமே வாழ்கிறது. அது தான் கோல்டன் லேன்ஸ்ஹெட். பனி காலம் முடிவில் கடல் மட்டம் உயர்ந்ததால், அந்த பகுதி பிரதான நிலப்பரப்பிலிருந்து பிரிந்து தீவாக மாறியது. அப்போது சிக்கிக் கொண்ட லான்ஸ்ஹெட் பாம்புகள், தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் புதிய இனமாக வளர்ச்சி பெற்றன.