Jana Nayagan: ஜன நாயகன் பட சென்சார் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல் முறையீடு!
Jana Nayagan Censor Certificate Case: இந்த 2026ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டுவந்த திரைப்படம்தான் ஜன நாயகன். இப்படமானது சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் படக்குழு மேல் முறையீடு செய்துள்ளது.
தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி திரைப்படமாக தயாராகியிருப்பதுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தில் தளபதி விஜய் அதிரடி போலீஸ் அதிகரிக்க நடிக்க, இயக்குநர் ஹெச்.வினோத் (H.Vinoth) இயக்கியுள்ளார். இதில் விஜய்யுடன் நடிகர்கள் பூஜா ஹெக்டே (Pooja Hegde), பிரகாஷ் ராஜ், நரேன், மமிதா பைஜூ, பிரியா மணி மற்றும் பாபி தியோல் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது கடந்த 2026 ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவிருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் (Censor certificate) பிரச்சனையின் காரணமாக அதிகாரப்பூர்வமாக படக்குழு ரிலீஸ் தேதியை ஒத்திவைத்துள்ளது. இந்த படத்தின் சென்சார் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) கடந்த 2026 ஜனவரி 6,7 போன்ற நாட்களில் விசாரிக்கப்பட்ட நிலையில், 3வது விசாரணை நேற்று 2026 ஜனவரி 9ம் தேதியில் நடைபெற்றிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா முதலில் இப்படத்திற்கு “யு /ஏ சான்றிதழ்” வழங்கும்படி தணிக்கைத்துறைக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை வழங்கிய சில நிமிடங்களில் தணிக்கைக்குழுவினர் (Audit Committee) உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. பின் நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி அருள்முருகன் தலைமையில் கூடுதல் விசாரணை நேற்று 2026 ஜனவரி 9ம் தேதியில் மதியம் 3:30 மணியளவில் நடந்தது. இதில் “மறு ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை என தனி நீதிபதி உத்தரவிட்டது சரியில்லை, அவரின் உத்தரவிர்க்கு தடை விதிக்கவேண்டும்” என தணிக்கைத்துறை சார்பில் வாதாடப்பட்டது.




இதையும் படிங்க: விரைவில் திரையில்… தெறி பட ரீ-ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!
ஜன நாயகன் படம் சென்சார் சான்றிதழ் குறித்து நீதிபதிகள் அமர்வு:
இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கிய நிலையில், சென்சார் இல்லாமல் படத்தய் வெளியிடமுடியாத நிலையில், படக்குழு இருப்பதாக ஜன நாயகன் படம் சார்பில் வாதிடப்பட்டது. அதற்கு தலைமை நீதிபதில்ல இருவரும், “சென்சார் சான்றிதழ் இல்லாமல் படத்தய் வெளியிடமுடியாதது, அப்படி இருக்கும்போது அதற்கு விண்ணப்பிக்கும் முன்பே படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்தீர்கள்?. மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது.
இதையும் படிங்க: தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது- ஜன நாயகன் பட சென்சார் குறித்து பா.ரஞ்சித் பதிவு!
மனுதாக்கல் செய்யக்கூட அவகாசம் இல்லாமல் இந்த அளவிர்க்கு அவர்சம் இந்த வழக்கில் எதற்கு?” என கேள்வி எழுப்பினர். மேலும் இப்படத்தின் தீர்ப்பிற்கு இடைக்கால தடையை நீதிபதிகள் விதித்துள்ளனர். மேலும் உயர்நீதிமன்ற மேல் முறையீடு வழக்கை வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
சுப்ரீம் கோர்ட்டில் ஜன நாயகன் படக்குழு மேல் முறையீடு பற்றிய பதிவு :
#JanaNayagan – KVN Productions has approached the Supreme Court against the High Court bench’s interim stay on the single judge’s order directing the film’s censor certificate..🤝 pic.twitter.com/67o0EwFCKZ
— Laxmi Kanth (@iammoviebuff007) January 10, 2026
உச்ச நீதிமன்றத்தை நாடிய ஜன நாயகன் படக்குழு :
இந்த ஜன நாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்கால தடை விதித்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளாதாம். இந்த மேல் முறையீட்டு மனுவை வரும் 2026 ஜனவரி 12ம் தேதியில் (திங்கள் கிழமை) அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.