Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Pa.Ranjith: தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது- ஜன நாயகன் பட சென்சார் குறித்து பா.ரஞ்சித் பதிவு!

Pa.Ranjith About Jana Nayagan Censorship Issue: தமிழ் சினிமாவில் சமூக கருத்துக்களை திரைப்படமாக கொண்டுவரும் இயக்குனர்களில் ஒருவராக இருந்துவருபவர் பா.ரஞ்சித். இவர் ஜன நாயகன் படம் எதிர்கொண்டுவரும் சென்சார் பிரச்சனைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் விதத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Pa.Ranjith: தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது- ஜன நாயகன் பட சென்சார் குறித்து பா.ரஞ்சித் பதிவு!
பா.ரஞ்சித்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 10 Jan 2026 11:57 AM IST

இயக்குநர் பா.ரஞ்சித்தின் (Pa.Ranjith)  படங்கள் சமூக பிரச்னைகளை பேசக்கூடிய கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இவர் தயாரிப்பாளராகவும் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பல படங்களை தயாரித்துவருகிறார். இவர் இறுதியாக துருவ் விக்ரம் (Dhruv Vikram) மற்றும் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) கூட்டணியில் வெளியான பைசன் (Bison) படத்தையும் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இயக்குநராக பா. ரஞ்சித் இறுதியாக தங்கலாண் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் இவருக்கு பெரியளவு வரவேற்பை கொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது தினேஷ் மற்றும் ஆர்யாவை வைத்து வேட்டுவன் படத்தை இயக்கி வருகிறார், இதையடுத்து சார்பட்டா 2 படத்தையும் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக கோலிவுட் சினிமாவில் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) ஜன நாயகன் (Jana Nayagan) படத்தின் சென்சார் பிரச்னை (Sensor Issue) பெரியதாக பேசப்பட்டுவரும் நிலையில், பல கோலிவுட் பிரபலங்களும் ஜன நாயகன் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துவருகின்றனர். அந்த வகையில் தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்தும் ஆதரவு குரல் கொடுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: தீ பரவியதா? சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!

ஜன நாயகன் படத்திற்கு ஆதரவு தெரிவித்து எக்ஸ் பதிவை வெளியிட்ட பா.ரஞ்சித் :

இந்த பதிவில் இயக்குநர் ப. ரஞ்சித், “ஜன நாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பராசக்தி படத்திற்கு வந்த நெருக்கடியை போலவே அவரின் இயக்கத்தில் மற்றும் தயாரிப்பில் வெளியாகியிருந்த சில படங்களுக்கும் இதுபோன்று சென்சார் பிரச்சனை வந்ததகவும் இதைப் பலமுறை கூறியுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜனநாயகன்…பராசக்திக்கு சிக்கல்… சிபிஐ, அமலாக்கத்துறை வரிசையில் சென்சார் போர்டு – முதல்வர் கண்டனம்

மேலும் ஜன நாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பது என்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காண்பிக்கிறது. மேலும், மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத்தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என அவர் அந்த பதிவில் வெளிப்படையாக கூறியுள்ளார்.