சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் புக்கிங்கை தொடங்கியது படக்குழு – வைரலாகும் அப்டேட்
Parasakthi Movie: தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் பராசக்தி. தணிக்கைச் சான்றிதழ் வர தாமதம் ஆன காரணத்தால் தொடர்ந்து படம் வெளியாகுமா இல்லையா என்று இருந்த நிலையில் தற்போது பிரச்சனைகள் அனைத்தும் முடிவடைந்து படம் திரையரங்குகளில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியளில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. ரொமாண்டிக் ஆக்ஷன் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் படம் வசூலில் ரூபாய் 100 கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் வெங்கட் பிரபு உடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக இயக்குநர் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வெளியான போது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. தொடர்ந்து படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியான போது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. முன்னதாக படம் 14-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பிறகு 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.




பராசக்தி படத்தின் புக்கிங்கை தொடங்கியது படக்குழு:
இந்த நிலையில் படத்தின் தணிக்கைச் சான்றிதல் பெற தாமதம் ஆன நிலையில் படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகுமா என்று கேள்வி இருந்தது. இந்த பிரச்சனைகள் அனைத்தும் தற்போது முடிவுக்கு வந்த நிலையில் நாளை படம் திரையரங்குகளில் வெளியாவது உறுதியாகி உள்ளது. மேலும் படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… தள்ளிப்போன ஜன நாயகன்… ரீ ரிலீஸாகும் தளபதி விஜயின் சூப்பர் ஹிட் படங்கள்!
படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Revolution now has a showtime ✊#Parasakthi – Bookings open now, grab your tickets and witness history from Tomorrow
District 🔗- https://t.co/I5I6USw6Lo
BookMyShow 🔗- https://t.co/X5a8oX4dUr#ParasakthiFromPongal#ParasakthiFromJan10@siva_kartikeyan @Sudha_Kongara… pic.twitter.com/UZvC8FSz72
— DawnPictures (@DawnPicturesOff) January 9, 2026
Also Read… ரியல் லைஃப் ஸ்டோரிதான் இந்தப் படம்… அமீர்கானின் தங்கல் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?