ஆண் – பெண் என்ற பாகுபாடு இல்லாமல் இயக்குநர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்… இயக்குநர் சுதா கொங்கரா
Director Sudha Kongara: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுதா கொங்கரா. இந்திய சினிமாவிலேயே குறைவான அளவில் தான் பெண் இயக்குநர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர்களுக்கு இடையேயான சம்பள வித்யாசம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பேசியது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல பெண் இயக்குநராக இருப்பவர் இயக்குநர் சுதா கொங்கரா. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இயக்குநர் சுதா கொங்கரா தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் நிலையில் தற்போது இவரது இயக்கத்தில் பராசக்தி படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் படம் நாளை 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் அதர்வா முரளி, ஸ்ரீ லீலா, ரவி மோகன், பிரித்வி ராஜன், பேசில் ஜோசஃப், குரு சோமசுந்தரம் என பலர் இந்தப் படத்தில் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளியாகும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் இருந்து முன்னதாக வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் சுதா கொங்கரா அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




பாகுபாடு இல்லாமல் இயக்குநர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்:
ஒரு ஆண் இயக்குநர் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும்போது, அதே படத்திற்கு நான் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறேன். நான் அமர்ந்து ஊதிய சமத்துவத்திற்காகப் போராடுகிறேன். ஒரு பெண் சூப்பர்ஸ்டாரின் வசூல் ஆண் நடிகர்களை விட மிக அதிகமாக இருக்கிறது, ஆனால் அவருக்கு அதில் நான்கில் ஒரு பங்கு சம்பளமே கிடைக்கிறது என்று இயக்குநர் சுதா கொங்கரா அந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பராசக்தி படத்தில் அந்த பிரபல மலையாள நடிகர்… உறுதி செய்த சிவகார்த்திகேயன்!
இணையத்தில் வைரலாகும் சுதா கொங்கராவின் பேச்சு:
“If Male director is getting getting 100Crs salary, I’m getting 50Crs salary for the same film💸. I sit & fight for equality of pay👊. One Lady Superstar collection is much more than male actors, but she is getting 1/4 of pay👀🤔”
– #SudhaKongarapic.twitter.com/fgJfDgpzNg— AmuthaBharathi (@CinemaWithAB) January 9, 2026
Also Read… ஸ்டாண்ட் வித் விஜய் அண்ணா… இணையத்தில் வைரலாகும் ரவி மோகனின் பதிவு