Ravi Mohan: என் படம் மட்டுமில்லை.. எல்லா படங்களும் எனக்கு ஒரு பாடம் தான்- ரவி மோகன்!
Ravi Mohan About Learning In Cinema: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன். இவரின் நடிப்பில் சமீபத்தில் பராசக்தின் படமானது திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இதன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தனது படங்களைப்போலவே, மற்ற படங்களும் தனக்கு ஒரு பாடம் என அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரவி மோகனின் (Ravi Mohan) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பராசக்தி (Parasakthi). இந்த படத்தில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ஹீரோவாக நடிக்க, “திருநாதன்” என்ற வில்லன் வேடத்தில் நடிகர் ரவி மோகன் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2026 ஜனவரி 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது சிவகார்த்திகேயனுக்கு பெரும் எதிர்பார்க்கப்பட்ட படமாக தயாராகிவந்த நிலையில், தற்போது மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நடிகர் ரவி மோகன் மலையாளத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவர், தனது படங்களை தொடர்ந்து, மற்ற நடிகர்களின் படங்களின் வெற்றியும் தோல்வியும் தனக்கு ஒரு பாடம்தான் என வெளிப்படையாகப் பேசியுள்ளார். இது குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: பராசக்தியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வசனம்? வலுக்கும் எதிர்ப்பு – என்ன நடந்தது?
சினிமாவில் தான் கற்றுக்கொள்ளும் பாடம் குறித்து மனம் திறந்த ரவி மோகன்:
நடிகர் ரவி மோகன் அந்த நேர்காணலில், “நான் எப்போதும் என்னுடைய புதிய படத்தை என்னுடைய முந்தைய படங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பேன். அது எனது படங்கள் மட்டுமில்லை, எல்லோருடைய திரைப்படங்களும் எனக்கு ஒரு எடுத்துக்காட்டு. அனைவரின் வெற்றி எனக்கு ஒரு பாடம் மற்றும் அவர்களின் தோல்வியும் எனக்கு ஒரு பாடம்தான். மேலும் சினிமாவில் எது பண்ணவேண்டும் எது பண்ணக்கூடாது என்ற எக்ஸ்பீரியன்ஸ் அதை புரிந்துகொண்டால்தான் வரும்.
இதையும் படிங்க: நான் நடிகராக கட்டாயப்படுத்தப்பட்டேன்… நடிகர் ரவி மோகன்
கற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கவேண்டும், இல்லையென்றால் அது மிகவும் கஷ்டம். எனக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தது, மேலும் ஒரு மாணவனாக அது இருக்கவேண்டும் கடைசிவரை மாணவனாக அது இருக்கும். இதுதான் எனது சினிமாவில் பயணத்தின் அடிப்படையான விஷயம். அதை தற்போதுவரையிலும் கடைபிடித்துவருகிறேன். மேலும் இதை எனது மரணப் படுக்கை வரையிலும் எடுத்து செல்வேன்” என அவர் அதில் வெளிப்படையாக பேசியிருந்தார்.
நடிகர் ரவி மோகன் பேசிய வீடியோ பதிவு :
#RaviMohan Recent
– I always compare my new film with my previous films. 🎥
– Not only that, every actor’s film is an example for me. Everybody’s success is a lesson for me, and I always think of myself as a good student. 📚✨#Parasakthi #Sivakarthikeyanpic.twitter.com/AF1tBSUn5J— Movie Tamil (@_MovieTamil) January 11, 2026
ரவி மோகனின் நடிப்பில் இந்த 2026ல் முதல் படமாக பராசக்தி அமைந்தது. இதில் ஹீரோவின் கதாபாத்திரத்தை விடவும், ரவி மோகனின் வில்லன் கதாபாத்திரத்தைத்தான் ரசிகர்கள் பரவலாக ரசித்திருந்தனர். இப்படத்தை அடுத்ததாக கராத்தே பாபு, ஜீனி என அடுத்தடுத்த படங்களும் ரவி மோகன் நடிப்பில் இந்த 2026ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



