Draupathi 2: திரௌபதியின் ஆட்டம் ஆரம்பம்… வெளியானது திரௌபதி 2 பட ட்ரெய்லர்!
Draupathi 2 Movie Trailer: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் மோகன் ஜி. இவரின் இயக்கத்தில் பார்ட் 2 படமாக தயாராகியுள்ளதுதான் திரௌபதி 2. இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபல நடிகராக இருந்துவருபவர் ரிச்சர்ட் ரிஷி (Richard Rishi). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் குறைவான படங்களே வெளியாகியிருந்தாலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம்தான் திரௌபதி 2 (Draupathi 2). இந்த திரைப்படத்தை பிரபல தமிழ் இயக்குநர் மோகன் ஜி (Mohan G) இயக்க, தயாரிப்பாளர் சலோ சக்கரவர்த்தி இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படமானது பழம்பெரும் வரலாற்று திரைப்படமாக தயாராகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி லீட் கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் வேல ராமமூர்த்தி, நட்டி சுப்ரமணியன், மகேந்திரன் தேவயானி ஷர்மா என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரலாற்று கதையில் சொல்லப்படாத பக்கங்களின் கதைக்களத்தில் தயாராகியுள்ளதாம்.
இப்படமும் இந்து மற்றும் இஸ்லாமிய போர் குறித்த வரலாற்றுக் கதையில் தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரிலீஸ் தேதி இன்னும் தெரியவில்லை. அந்த வகையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: சிறை படம் அன்பினால் நிரம்பி வழிகிறது – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விக்ரம் பிரபு!
திரௌபதி 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து இயக்குநர் மோகன் ஜி வெளியிட்ட பதிவு :
#Draupathi2Trailer is here 🔥🔥
Aatam Aarambam 💥💥💥https://t.co/3ZaoemYXD2— Mohan G Kshatriyan (@mohandreamer) January 10, 2026
கடந்த 2020ல் வெளியான திரௌபதி என்ற படத்தை இயக்குநர் மோகன் ஜி இயக்கியிருந்தார். இதில் நடிகர்கள் ரிஷி மற்றும் ஷீலா ராஜ் குமார் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. அந்த வகையில் இப்படத்தை அடுத்ததாக மிகவும் வித்தியாசமான கதியில்தான் இந்த திரௌபதி 2 படம் தயாராகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படமானது வெளியீட்டிற்கு முன்னே பல்வேறு விமர்சனங்களை பெற்றுவந்த நிலையில், சமீபத்தில் பாடகி சின்மயி இப்படத்தில் பாடல் பாடியதற்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.
இதையும் படிங்க: தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது- ஜன நாயகன் பட சென்சார் குறித்து பா.ரஞ்சித் பதிவு!
அதன்படி அவர் பாடிய பாடல் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டதாக இயக்குநர் மோகன் ஜி கூறியிருந்தார். இந்நிலையில் வெளியீட்டிற்கு முன்னே பல்வேறு இன்னல்களை சந்தித்துவந்த இப்படம் 2026 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதன் காரணமாக இன்று 2026 ஜனவரி 10ம் தேதியில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தத்க்கது.