Draupathi 2: பொங்கல் ரிலீஸில் இணைந்த மோகன் ஜி-யின் திரௌபதி 2 படம்.. எப்போது ரிலீஸ் தெரியுமா?
Draupathi 2 Release Update: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் மோகன் ஜி. இவரின் இயக்கத்தில் ரிலீஸிற்கு முன்பே சர்ச்சையை ஏற்படுத்திவந்த படம்தான் திரௌபதி 2 படம். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இதன் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் ரிச்சர்ட் ரிஷி (Richard Rishi) முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் திரௌபதி 2 (Draupathi 2). இந்த படத்தை இயக்குநர் மோகன் ஜி (Mohan G) இயக்க, தயாரிப்பாளர் சலோ சக்கரவர்த்தி தயாரித்துள்ளார். இந்த படமானது பண்டைய காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை இயக்குநர் மோகன் ஜி பெரும் பொருட்செலவில் இயக்கியுள்ள நிலையில், படமானது மிக பிரம்மாண்ட கதைக்களத்தில் அமைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் ரிச்சர்ட் ரிஷியுடன் நடிகர்கள் தேவியானி சர்மா (Deviyyani Sharma), நடராஜன் சுப்ரமணியம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்திலிருந்து “என்கோனே” என்ற பாடல் ஒன்றை பாடகி சின்மயி பாடியிருந்த நிலையில், இந்த படத்தில் பெண்களை இழிவாக காட்டப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவந்த நிலையில், பாடலை பாடியதற்கு சின்மயி (Chinmayi) மன்னிப்பு கேட்டிருந்தார்.
இவ்வாறாக இப்படமானது வெளியீட்டிற்கு முன்னே பல எதிர்ப்புகள் இருந்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் 2026 ஜனவரி 15ம் தேதியில் பொங்கல் பண்டிகையன்று வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்சார் சான்றிதழ் விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஜன நாயகன் படக்குழு
திரௌபதி 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வெளியான எக்ஸ் பதிவு :
#Draupathi2 – @mohandreamer‘s period drama confirms Jan 15 release. Pongal arrival! pic.twitter.com/kSez6EMV1h
— Siddarth Srinivas (@sidhuwrites) January 12, 2026
திரௌபதி 2 படத்தின் கதை :
இந்த திரௌபதி 2 படமானது கிட்டத்தட்ட ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 14ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படமானது மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பிற்கு முன்னே ட்ரெய்லர் வெளியாகியிருந்தது. இப்படத்தின் ட்ரெய்லர் ஆக்ஷ்ன் மற்றும் காதல் போன்ற கதைக்களத்தில் காட்டப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ரவி மோகனுக்காக மட்டும்தான் படம் ஓடும்.. பராசக்தி படத்தை பார்த்த பாடகி கெனிஷா பேச்சு!
இந்நிலையில் தற்போது பொங்கல் போட்டியில் இப்படமும் இணைந்துள்ளது. ஏற்கனவே இந்த 2026ம் ஆண்டு போன்களில் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதும் கிட்டத்தட்ட 4 படங்கள் தொடர்ந்து வெளியாகவுள்ளது. கார்த்தியின் வா வாத்தியார், ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் போன்ற படங்களுடன் தற்போது இந்த திரௌபதி 2 படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



