Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்சார் சான்றிதழ் விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஜன நாயகன் படக்குழு

Jana Nayagan Movie Censor Case: நடிகர் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி திரையரங்குகளில் வெளியாகாமல் தள்ளிப்போன படம் ஜன நாயகன். இந்தப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதம் ஆனதால் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் படக்குழு தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

சென்சார் சான்றிதழ் விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஜன நாயகன் படக்குழு
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Jan 2026 14:18 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியாக காத்திருந்த படம் ஜன நாயகன். நடிகர் விஜய் தமிழக அரசியலில் களம் இறங்கி உள்ளதால் அவர் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதன் காரணமாக அவரது நடிப்பில் இறுதியாக உருவாகி வந்த அவரது 69-வது படமான ஜன நாயகன் தான் கடைசிப் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன் தயாரித்து உள்ளது. ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே படம் தொடர்பான அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்தது இந்த தயாரிப்பு நிறுவனம்.

மேலும் இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ளார். இந்த ஜன நாயகன் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பாபி தியோல், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, நரேன், பிரியாமணி என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் கடந்த 09ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டே வெளியாக இருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஜன நாயகன் படக்குழு:

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தை ஜன நாயகன் படக்குழு நாடியது. ஆனால் வழக்கு வருகின்ற 21-ம் தேதி ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு விடுப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை நாளை முன்கூட்டியே விசாரணைக்கு பட்டியலிடக் கோரி ஒரு கோரிக்கை விடுக்கப்படலாம்.

தயாரிப்பாளர் அந்த கோரிக்கையை குறிப்பாகக் கோராவிட்டாலும், அதனை மாற்றுவதற்கும், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்வதற்கும் உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் ஒரு பதில் மனுவைத் தாக்கல் செய்திருந்தாலும், அதனால் புதிதாக எதையும் சேர்த்திருக்க முடியாது, ஏனெனில் நீதிமன்றம் சமர்ப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஏற்கனவே உள்ளவற்றை மட்டுமே கருத்தில் கொள்ள முடியும்.

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி பி.டி. ஆஷா அவகாசம் வழங்காதது அந்த வாரியத்திற்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தவில்லை, ஏனெனில் அவர் ஏற்கனவே மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் அனைத்து ஆவணங்களையும் வரவழைத்து அவற்றை விரிவாக ஆய்வு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… பராசக்தியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வசனம்? வலுக்கும் எதிர்ப்பு – என்ன நடந்தது?

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… 3 ஆண்டுகளைக் கடந்தது தளபதி விஜயின் வாரிசு படம்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்