3 ஆண்டுகளைக் கடந்தது தளபதி விஜயின் வாரிசு படம்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்
3 Years of Varisu Movie: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பிம் முன்னதாக திரையரங்குகளில் வெளியான வாரிசு படம் இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் படக்குழு தற்போது போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் வாரிசு. இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் வம்ஷி பைடிப்பள்ளி எழுதி இயக்கி இருந்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக இவர் வலம் இவர் தோழா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் ஆக்ஷன் மற்றும் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான இந்த வாரி படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தனர்.
அதன்படி இந்த வாரிசு படத்தில் நடிகர்கள்,ராஷ்மிகா மந்தனா,
ஆர்.சரத்குமார், எஸ்.ஜே. சூர்யா, ஷாம், பிரபு, ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராமன், முரளி சர்மா, சம்யுக்தா சண்முகநாதன், சஞ்சனா திவாரி, அத்வைத் வினோத், ஹர்ஷிதா கார்த்திக், சுமன், மைம் கோபி, பாண்டி ரவி, நந்தினி ராய், மேத்யூ வர்கீஸ், நிமிஷா நம்பியார், ஸ்ரீமன், VTV கணேஷ், பரத் ரெட்டி, டி.ஆர்.கே.கிரண், பாய்ஸ் ராஜன், சூப்பர் குட், கீர்த்தி சாந்தனு என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து இருந்த நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார்.




3 ஆண்டுகளைக் கடந்தது தளபதி விஜயின் வாரிசு படம்:
சரத் குமார் மற்றும் ஜெயசுதா தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகன் தான் விஜய். தனது தந்தை சரத்குமார் உடனான மனகசப்பிற்கு பிறகு வீட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வருகிறார் விஜய். இப்படி இருக்கும் நிலையில் தனது அண்ணன் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்ட நிலையில் அம்மா வருத்தத்தில் இருப்பதால் அந்த பிரச்னைகளை சரி செய்வதற்காக மீண்டும் வீட்டிற்கு வருகிறார்.
தொடர்ந்து தனது குடும்பத்தில் நடக்கும் பிரச்னைகள் அனைத்திற்கும் காரணம் அப்பாவின் பிசினஸ் எதிரி பிரகாஷ் ராஜ் என்பதை அறிந்துகொள்கிறார் விஜய். அதனைத் தொடர்ந்து அனைத்துப் பிரச்னைகளையும் விஜய் எப்படி சரி செய்தார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
வாரிசு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவு:
Thee Idhu Thalapathy
Pera Kettaa Whistle Adi
Thee Idhu Thalapathy
Unga Nenjin Adhipathi🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
3 years and counting since the whistling experience we got in theatres 💥💥💥💥💥
A @directorVamshi Film 🎥 @actorvijay @iamRashmika @MusicThaman @SVC_official… pic.twitter.com/3VyZfexPU8
— Sri Venkateswara Creations (@SVC_official) January 11, 2026