சிவகார்த்திகேயனின் பரசாக்தி பட முதல் பாதி எப்படி இருக்கு? எக்ஸ் பக்க விமர்சனங்கள் இதோ
Parasakthi first half Review : சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பாதி அனுபவங்களை ரசிகர்கள் தங்கள் எக்ஸ் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி (Parasakthi). சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் கடந்த 1960களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சில காட்சிகள், வசனங்கள் என 25 இடங்களில் சென்சாரில் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பொங்கலுக்கு ஜனநாயகன் (Jananayagan) சென்சார் பிரச்னையின் காரணமாக வெளியாகாததால் இந்தப் படம் தமிழ்நாட்டில் சோலோவாக 700 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இந்தப் படம் 9 மணிக்கு வெளியாகும் நிலையில், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் காலை 6 மணி காட்சிகள் திரையிடப்பட்டன. இதனையடுத்து ரசிகர்கள் தங்கள் முதல் பாதி படத்தின் அனுபவத்தை தங்களது எக்ஸ் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பராசக்தி பட எக்ஸ் விமர்சனங்கள்
பிரபல தெலுங்கு விமர்சகர் வெங்கி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில், படத்தின் துவக்கத்திலேயே நேரம் எடுக்காமல் கதைக்குள் சென்று விடுகிறது. நல்ல பீரியட் காட்சிகள் சிறந்த முறையில் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சிறிது நேரத்திலேயே படம் மிக மெதுவாக செல்கிறது. பெரும்பாலும் காதல் காட்சிகள் தான் இருக்கின்றன. அவை சுவாரசியமாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.




இதையும் படிக்க : ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கான இறுதிப் போட்டியில் இடம் பிடித்தது டூரிஸ்ட் ஃபேமிலி படம்
‘படம் மெதுவாக நகர்கிறது’
#Parasakthi Dull 1st Half!
Film jumps straight into the story with an authentic period setup, but drags right after the setup with a very slow narration and a filler love track that takes up most of the time and is boring. Interval is ok. 2nd half awaits!
— Venky Reviews (@venkyreviews) January 10, 2026
மேலும், மித்ரன் என்பவர் பகிர்ந்த எக்ஸ் விமர்சனத்தில், முதல் பாதி எந்த எமோஷனல் கனெக்ட்டும் இல்லை. மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதி சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
‘எமோஷனல் கனெக்ட் இல்லை’
#Parasakthi 1st Half Review – Until now, Zero Emotional Connect so far, Slow Pill. Need Great 2nd Half. Let’s C 🤗#ParasakthiReview pic.twitter.com/vZhUW8ew4K
— Mithran R (@r_mithran) January 10, 2026
இதையும் படிக்க : பராசக்தியில் அண்ணாவின் வசனம் நீக்கம்… சென்சாரில் 25 கட் – என்னென்ன காட்சிகள் நீக்கம்?
பான் இந்தியா ஃபீட் என்ற எக்ஸ் பக்கத்தில், பராசக்தி ஒரு நம்பகமான கடந்த காலகட்டப் பின்னணியுடன் சிறப்பாகத் தொடங்குகிறது, ஆனால் கதை சொல்லும் விதம் விரைவில் மந்தமாகிவிடுகிறது. நீண்ட காதல் காட்சிகள் முதல் பாதியின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து, பொறுமையை சோதிக்கின்றன. இடைவேளை பரவாயில்லை. இரண்டாம் பாதி விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
‘பொறுமையை சோதிக்கும் காதல் காட்சிகள்’
#Parasakthi opens well with an authentic period setup, but the narration soon turns sluggish.
A prolonged love track eats up most of the first half and tests patience. Interval is decent. Hoping the 2nd half picks up!
— ThePanIndiaFeed (@ThePanIndiaFeed) January 10, 2026