Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Rio: தலைவா பட பிரச்னை அப்போ கவின் செய்த விஷயம்.. – ரியோ ராஜ் சொன்ன விஷயம்!

Rio Raj Reveals Kavin's Passion: தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் ஹீரோக்களாக களமிறங்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் ரியோ ராஜ் மற்றும் கவினும் உள்ளார்கள். இந்நிலையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய ரியோ ராஜ், தலைவா அப்படத்தின் ரிலீஸ் பிரச்சனையின்போது கவின் செய்த சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

Rio: தலைவா பட பிரச்னை அப்போ கவின் செய்த விஷயம்..  – ரியோ ராஜ் சொன்ன விஷயம்!
கவின் மற்றும் ரியோ ராஜ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Jan 2026 08:30 AM IST

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரியோ ராஜ் (Rio Raj). இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடிகராக நுழைந்து தற்போது சினிமா ஹீரோவாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பிலும் தமிழில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் அவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம்தான் ஆண்பாவம் பொல்லாதது (Aan paavam pollathathu). கடந்த 2025ம் ஆண்டின் இறுதியில் வெளியான இப்படம் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை அடுத்ததாக புது படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார் இவர்.

இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ரியோ ராஜ், நடிகரும் தனது நண்பருமான கவின் ராஜ் (Kavin Raj) குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) தலைவா (Thalaivaa) பட ரிலீஸ் பிரச்னையின்போது நடந்த சம்பவம் பற்றி தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: என் படம் மட்டுமில்லை.. எல்லா படங்களும் எனக்கு ஒரு பாடம் தான்- ரவி மோகன்!

கவினின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Kavin M (@kavin.0431)

நடிகர் கவினின் குணம் குறித்து வெளிப்படையாக பேசிய ரியோ ராஜ் :

அந்த நேர்காணலில் பேசிய ரியோ ராஜ், “கவின் பத்தி சொல்லவேண்டும் என்றால், கனகாணும் காலங்கள் தொடர் ஷூட்டிங்கை முடித்து நாங்கள் எல்லோருமே ஒரே அறையில் இருந்தோம். அவ்வப்போது கவின் அங்கு வந்து செல்வது வழக்கம். அந்த சமயத்தில் தளபதி விஜய்யின் தலைவா படத்தின் ரிலீஸ் பிரச்னை நடந்துகொண்டிருந்தது. அப்போது எங்களுக்கு பிரைவசி சீடி கிடைத்தது. அப்போது இங்க தமிழகத்தில் படம் வெளியாகவில்லை என்ற நிலையில், பெங்களூருவில் சென்று பார்க்கமுடியுமா என நினைத்து, எல்லோரும் அந்த படத்தை போட்டு பார்க்கலாம் என பேசிக்கொண்டு இருந்தோம். அப்போதுவந்த கவின் அந்த தலைவா பட சீடியை உடைத்துவிட்டு, இதுபோன்று திருட்டு சீடியை எனக்கு பார்க்க பிடிக்காது என்றார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாண்ட்ரா… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

மேலும், நாம் எல்லோரும் சினிமாவிற்கு முயற்சி செய்துகொண்டு இருக்கிறோம். அப்போது இதுபோன்று பண்ணலாமா? என சொல்லிவிட்டு அந்த சீடியை உடைத்துவிட்டார். படம் பார்க்கலாம் என நாங்கள் எல்லோரும் காத்திருதோம். கவின் அந்த அளவிற்கு சினிமாவை காதலிக்கிறார். மேலும் அவரின் பக்கத்தில் இருக்கும் யாருமே இதுபோன்று தவறு செய்வது அவருக்கு பிடிக்காது” என அதில் கவினை குறித்து நடிகர் ரியோ ராஜ் புகழ்ந்து பேசியிருந்தார்.