ரவி மோகனுக்காக மட்டும்தான் படம் ஓடும்.. பராசக்தி படத்தை பார்த்த பாடாகி கெனிஷா பேச்சு!
Kenishaa Francis About Ravi Mohan: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தான் ரவி மோகன். இவர் வில்லனாக நடித்துள்ள படம் பராசக்தி. இப்படம் வெளியான நிலையில், முதல் காட்சியை பார்த்த ரவி மோகனின் தோழி, கெனிஷா பேசிய விஷயம் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) மற்றும் சிவகார்த்திகேயனின் (SIvakarthikeyan) முன்னணி நடிப்பில் இன்று 2026 ஜனவரி 10 ஆம் தேதி முதல் மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த படத்தை பிரபல இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கியுள்ள நிலையில், டான் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படமானது இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் “செழியன்” என்ற ஹீரோ வேடத்தில் நடிக்க, நடிகர் ரவி மோகன் “திருநாதன்” என்ற வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷின் இசையமைப்பும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படமானது இன்று 2026 ஜனவரி 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியான நிலையில், சென்னை வடபழனியில் உள்ள காசி திரையரங்கில் ரவி மோகன் மற்றும் அவரின் தோழி பாடகி கெனிஷா பிரான்சிஸ் (Kenishaa francis) இருவரும் இணைந்து பார்த்துள்ளனர்.
இந்த படத்தில் முதல் நாள் முதல் ஷோவை பார்த்து முடித்தபின் செய்தியாளர்களை ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவருமே சந்தித்திருந்தனர். அதில் பேசிய கெனிஷா, “ரவி மோகனால்தான் இந்த படம் ஓடும்” என கூறியுள்ளார். இது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: தீ பரவியதா? சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!
பராசக்தி படம் குறித்து நடிகர் ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
All my dreams and goals in this lifetime is to do Cinema at my highest best, no matter the role.
Catch me tomo at theatres near you 🌪️#ravimohan #parasakthi🔥 10th Jan. pic.twitter.com/4PY1lJdpPR— Ravi Mohan (@iam_RaviMohan) January 9, 2026
பராசக்தியின் ரவி மோகன் குறித்து பாடகி கெனிஷா பேசிய விஷயம் :
பராசக்தி படத்தைப் பார்த்துவிட்டு செய்தியாளர்ளை சந்தித்த கெனிஷாவிடம், ” பராசக்தி படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார் அது குறித்து என்ன சொல்ல விரும்பிக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கெனிஷா, “அவர் வில்லனாக நடித்தால் என்ன.. ஹீரோவாக நடித்தால் என்ன.. அவரால்தான் படம் ஓடும். இந்த படத்தில் எனக்கு வேறுயாரும் தெரியவில்லை, எனது கண்களுக்கு முழுவதும் அவர் மட்டுமே தெரிகிறார்.
இதையும் படிங்க: ‘கப்பு முக்கியம் பிகிலே’.. விஜய் ரசிகர்களிடையே வைரலாகும் சூர்யாவின் வீடியோ!
இந்த அதற்காக கிட்டத்தட்ட 6 மாதங்கள் உழைத்துள்ளார். இந்த படத்தை பார்க்கும்போது இந்த படமே அவருக்காகத்தான் பண்ணிருக்காங்க என்பதுபோல இருக்கிறது. அவர் எந்த ரோல் பண்ணா என்ன, இந்த படத்தில் ஆவர்தான் நம்பர் 1. மேலும் அவரின் கதாபாத்திரம் முதல் பாதியில் பார்ப்பதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும், ஆனால் இறுதியில் அவர் இல்லாமல் எதுவும் இல்லை என தெரிந்துவிடும்” என அவர் அதில் வெளிப்படையாக கூறியுள்ளார்.