Baadshaa: ‘நா ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி’… 31 ஆண்டுகளை கடந்தது ரஜினிகாந்தின் ‘பாட்ஷா’!
31 Years Of Baashaa: கோலிவுட் சினிமாவில் முக்கிய தூணாக இருந்துவருபவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் கடந்த 1995ம் ஆண்டில் வெளியாகிய படம்தான் பாட்ஷா. இப்படம் வெளியாகி இன்று 2026 ஜனவரி 12ம் தேதியோடு 31 வருடத்தை நிறைவு செய்துள்ளது. இது குறித்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா ஸ்பெஷல் பதிவை வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலமாக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் மட்டும் இதுவரை மொத்தமாக சுமார் 171 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் இறுதியாக வெளியான படம் கூலி (Coolie). லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இப்படம் கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியிருந்தது. இப்படமானது கடந்த 2024ல் அதிகம் வசூல் செய்த தமிழ் படத்தில் முதலிடத்தை பிடித்திருந்தது. இப்படங்களை அடுத்ததாக மேலும் பல படங்களில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் கடந்த 1995ம் ஆண்டில் வெளியான திரைப்படம்தான் பாட்ஷா (Baashaa). இந்த படத்தை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா (Suresh Krissna)இயக்க, ரஜினிகாந்த், நக்மா (Nagma) மற்றும் ரகுவரன் (Raghuvaran) உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த படமானது 1995ம் ஆண்டில் ஜனவரி 12ம் தேதியில் வெளியாகியிருந்த நிலையில், இன்று 2026 ஜனவரி 12ம் தேதியுடன் வெளியாகி 31 ஆண்டுகளை கடந்துள்ளது. இது குறித்த ஸ்பெஷல் பதிவை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: பொங்கல் ரிலீஸில் வரிசைக்கட்டும் புதுப் படங்கள்… லிஸ்ட் இதோ
பாட்ஷா படத்தின் 31வது ஆண்டு நிறைவு குறித்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா வெளியிட்ட பதிவு:
31 Years of Baasha⁰A phenomenon crafted by many legends.⁰Rajinikanth — MASS redefined.⁰Music that roared by Deva 🎶⁰Words that struck gold by Vairamuthu ⁰A towering villain — Raghuvaran⁰Grace & glamour — Nagma#31YearsOfBaasha #SuperstarRajinikanth pic.twitter.com/pMhjicq1Xj
— sureshkrissna (@Suresh_Krissna) January 12, 2026
இந்த பாட்ஷா படமானது ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான சிறப்பான கேங்ஸ்டர் படமாகும். இப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிகை நக்மா நடித்திருந்தார். மேலும் வில்லனாக நடிகர் ரகுவரன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மாணிக்க என்ற ஆட்டோ ஓட்டுனர்க இருந்த ரஜினிகாந்த் எவ்வாறு கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதே இப்படத்தின் மைய கதையாக இருக்கும். இப்படத்தில் அதிகமான மாஸ் காட்சிகள் மற்றும் பல அதிரடி காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.
இதையும் படிங்க: சென்சார் சான்றிதழ் விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஜன நாயகன் படக்குழு
இந்த படமானது 31 வருடங்களுக்கு முன் திரையரங்குகளில் சுமார் 100 நாட்களுக்கும் மேல் சிறப்பாக ஓடியதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இசையமைப்பாளர் தேவாவின் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாகவே இருந்தது என்றே கூறலாம். பழமை மாறாமல் இருக்கும் இப்படத்தை தற்போது பார்த்தாலும் சலிக்காத வண்ணம் இருக்கும். இப்படம் தற்போதும் ஜியோஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், போன்ற ஓடிடி தளங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.