Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆக்‌ஷன் காமெடியில் வெளியான இந்த நானிஸ் கேங் லீடர் படத்தை பார்த்து இருக்கீங்களா?

Nani's Gang Leader Movie: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவரது நடிப்பில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நானிஸ் கேங் லீடர் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

ஆக்‌ஷன் காமெடியில் வெளியான இந்த நானிஸ் கேங் லீடர் படத்தை பார்த்து இருக்கீங்களா?
நானிஸ் கேங் லீடர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Jan 2026 22:52 PM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் சினிமாவில் நடிகராக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து சினிமாவில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் நானிக்கு தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் மற்றும் மலையாள சினிமாவிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளனர். அதில் குறிப்பாக தமிழில் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் நானி நடிப்பில் ஆக்‌ஷன் காமெடி பாணியில் வெளியான நானிஸ் கேங் லீடர் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இந்தப் படத்தை இயக்குநர் விக்ரம் குமார் எழுதி இயக்கி இருந்தார்.

மேலும் நடிகர் நானி உடன் இணைந்து நடிகர்கள் கார்த்திகேயா, லட்சுமி, சரண்யா பொன்வண்ணன், பிரியங்கா அருள் மோகன், ஷ்ரியா கொந்தம், பிரண்யா பி. ராவ், அனிஷ் குருவில்லா, வெண்ணிலா கிஷோர், பிரியதர்ஷி புலிகொண்டா, சத்யா, விவேக் குமார், கெட்அப் ஸ்ரீனு, சுகுமார், அனிருத் ரவிச்சந்தர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் கடந்த 13-ம் தேதி செப்டம்பர் மாதம் 2019-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்த நிலையில் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நானிஸ் கேங் லீடர் படத்தின் கதை என்ன?

ஆறு பேர் கொண்ட ஒரு குழு, ஒரு வங்கிக் கொள்ளையைத் துல்லியமாகத் திட்டமிட்டு நடத்தி, 300 கோடி ரூபாயைக் கொள்ளையடிக்கிறது. இருப்பினும், பேராசை விசுவாசத்தை வென்றபோது, ​​அவர்களில் ஒருவன் மற்றவர்களைக் காட்டிக் கொடுத்து, தனது ஐந்து கூட்டாளிகளையும் கொன்றுவிட்டு, முழுப் பணத்துடனும் தலைமறைவாகிவிடுகிறான்.

Also Read… பிக்பாஸில் விக்ரமை தவிர்க்கும் முன்னாள் போட்டியாளர்கள்… சோகத்தில் விக்ரம்

இவர்களில் கொல்லப்பட்ட அந்த 5 பேரின் குடும்பத்தில் உள்ளவர்களும் தலைமறைவான அந்த நபரை தேடி கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரு க்ரைம் நாவல் எழுதும் நபரான நானி உதவி செய்கிறார். இவர்கள் இறுதியில் அந்த கொலையாளியை எப்படி கண்டுபிடித்து கொலை செய்தனர் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… தனுஷ் – தமிழரசன் பச்சைமுத்து படத்தின் அப்டேட் எப்போது? வைரலாகும் தகவல்