Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக்பாஸில் விக்ரமை தவிர்க்கும் முன்னாள் போட்டியாளர்கள்… சோகத்தில் விக்ரம்

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் நூறு நாட்களை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்னும் 5 நாட்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ள நிலையில் முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர்.

பிக்பாஸில் விக்ரமை தவிர்க்கும் முன்னாள் போட்டியாளர்கள்… சோகத்தில் விக்ரம்
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Jan 2026 11:04 AM IST

தமிழ் சின்னத்திரையான விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தொடங்கியது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 100-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியை கடந்த 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். முதலில் நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது பல விமர்சனங்கள் எழுந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அவரின் பேச்சு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறத் தொடங்கியது. தொடர்ந்து இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி போட்டியாளர்களின் தவறுகளை முகத்திற்கு நேராக கேட்கும் போது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்த சீசனில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

அதன்படி இந்த நிகழ்ச்சியில் முன்னதாக 20 போட்டியாளர்கள் தொடக்கத்தில் அனுப்பப்பட்ட நிலையில் 4 போட்டியாளர்கள் வைல்கார்ட் போட்டியாளர்களாக உள்ளே அனுப்பப்பட்டனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக வெளியேறிய நிலையில் தற்போது 4 பேர் மட்டுமே ஃபைனலிஸ்டாக இருக்கிறார்கள். அதன்படி இந்த நிகழ்ச்சியில் திவ்யா, அரோரா, சபரி மற்றும் விக்ரம் ஆகியோர் ஃபைனலிஸ்டாக இருக்கிறார்கள்.

பிக்பாஸில் விக்ரமை தவிர்க்கும் முன்னாள் போட்டியாளர்கள்:

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் முன்னாள் போட்டியாளர்கள் மீண்டும் வருகிறார்கள். அப்படி வரும் போட்டியாளர்கள் அனைவரும் விக்ரமின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு அவர் தங்களை ஏமாற்றியதாக தோன்றி அவரிடம் பேசுவதை தவிர்க்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சுபிக்‌ஷா மற்றும் கனி இருவரும் விக்ரமிடம் சரியாக பேசவில்லை. இது விக்ரமை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் ஃபினாலே டாஸ்க்…!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பொங்கலுக்கு ஜன நாயகன் வெளியாகாதது வருத்தமளிக்கிறது – நடிகர் ஜீவா