பொங்கலுக்கு ஜன நாயகன் வெளியாகாதது வருத்தமளிக்கிறது – நடிகர் ஜீவா
Actor Jiiva: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் இவரது பட விழாவில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து காமெடியை மையமாக வைத்து கலகலப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் ஜீவா. இவர் காமெடியான படங்களில் மட்டும் இன்று கற்றது தமிழ், ராம் போன்ற அழுத்தமான கதைகளிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நடிகராக இருக்கிறார் நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் அகத்தியா. ஹாரர் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள படம் தலைவர் தம்பி தலைமையில். இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான போதே ரசிகர்களிடையே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.
இந்தப் படத்தை இயக்குநர் நித்தின் சகாதேவன் எழுதி இயக்கி உள்ளார். இவர் மலையாள சினிமாவில் நடிகர் பேசில் ஜோசஃப் நடிப்பில் வெளியான ஃபலிமி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் மலையாள சினிமாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள தலைவர் தம்பி தலைமையில் படத்தின் விழாவில் நடிகர் ஜீவா பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




பொங்கலுக்கு ஜன நாயகன் வெளியாகாதது வருத்தமளிக்கிறது:
இந்த நிலையில் நடிகர் ஜீவா அந்த பட விழாவில் பேசியதாவது, ஆரம்பத்தில் தலைவர் தம்பி தலைமயில் ஜனவரி 30 ஆம் தேதி வெளியிடவே திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கே வெளியாகிறது. திரையரங்குகளில் ஜன நாயகன் படம் வெளியாகாத காரணத்தால் ஒரு வெற்றிடம் நிலவுவதால் திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெளியிட கோரிக்கை வைத்தனர். படம் பொங்களுக்கு வெளியாவது எங்களுக்கு மகிழ்ச்சிதான். அதே நேரத்தில் ஜன நாயகன் பொங்கலுக்கு வெளியாகாதது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. ஏனென்றால் நடிகர் விஜய் சார் திரைப்படத் துறைக்கு ஆதரவாக இருந்தார் என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
Also Read… Dulquer Salmaan: துல்கர் சல்மான் தமிழ் சினிமாவில் நோ சொன்ன படங்களின் நிலை இதுதானா?
இணையத்தில் கவனம் பெறும் நடிகர் ஜீவா பேச்சு:
“Initially #TTT supposed to release on Jan 30th, but now releasing on Jan 15th. At the same time we are unhappy that #JanaNayagan didn’t release for Pongal🙁. Because @actorvijay sir was supportive towards industry♥️”
– #Jiiva |#ThalaivarThambiThalaimaiyil pic.twitter.com/EY4bbvJ9eL— AmuthaBharathi (@CinemaWithAB) January 12, 2026
Also Read… ராணா மற்றும் பேசில் ஜோசஃபிற்கு போஸ்டர் வெளியிட்டு நன்றி தெரிவித்த பரசக்தி படக்குழு!