Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக்பாஸ் 9 செலிப்ரேஷன் வீக்.. வீட்டிற்கு கெஸ்டாக வந்த சாண்டி – கவின்.. வைரலாகும் புரோமோ!

Bigg Boss Tamil 9 finale: தமிழில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக் பாஸ் சீசன் 9 தமிழ். இந்த நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், வரும் 2026 ஜனவரி 18ம் தேதியோடு நிறைவடைகிறது. இந்நிகழ்ச்சியில் கெஸ்டாக முன்னாள் போட்டியாளர்களான கவின் மற்றும் சாண்டி வந்துள்ளனர்.

பிக்பாஸ் 9 செலிப்ரேஷன் வீக்.. வீட்டிற்கு கெஸ்டாக வந்த சாண்டி – கவின்.. வைரலாகும் புரோமோ!
சாண்டி - கவின்
Barath Murugan
Barath Murugan | Published: 16 Jan 2026 10:52 AM IST

தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் ரியாலிட்டி ஷோதான் பிக் பாஸ் சீசன் 9 (Bigg Boss Season 9). இந்த நிகழ்ச்சியானது கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், தற்போது கிட்டத்தட்ட 103 நாட்களை கடந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியானது தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், இதில் விக்கல்ஸ் விக்ரம் (Vikram), திவ்யா (Divya), சபரி (Sabari)மற்றும் அரோரா உள்ளிட்ட 4 போட்டியாளர்கள் இறுதிக்கட்டத்திற்கு முன்னேறியுள்ளனர். இந்நிலையில் இறுதி வாரமான நிலையில், இந்த பிக் பாஸ் சீசன் 9 பழைய போட்டியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். இந்த வாரம் கொண்டாட்டமாக இருக்கும் என நினைத்த நிலையில், ஆரம்பத்தில் இருந்ததுபோல சண்டையாகத்தான் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று 2026 ஜனவரி 16ம் தேதியோடு 103 நாட்களை கடந்துள்ளது.

இந்நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இதில் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களின் கவின் (Kavin) மற்றும் சாண்டி (Sandy) விருந்தினராக கலந்துகொண்டுள்ளனர். இது தொடர்பான தகவல் புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஹீரோவாக அறிமுகமான இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்… ரசிகர்களிடையே வைரலாகும் புது பட கிளிம்ப்ஸ்!

பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியின் 103வது நாளின் முதல் புரோமோ பதிவு:

இந்த புரோமோவில் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவின் மற்றும் சாண்டி இந்த நிகழ்ச்சிக்கு விருத்தினராக வந்திருந்தனர். இதில் அவர்கள் பிக் பாஸ் சீசன் 3ல் பேசிக்கொண்டது போல குழந்தை தனமாக பேசியுள்ளனர். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் சாண்டி மற்றும் கவின் இணைந்து புது படத்தில் நடிக்கவுள்ளதாக பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும் அறிவித்துள்ளனர். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: அங்க நான் தப்பு பண்ணிட்டேன்.. மொத்தம் 84 டேக் – மிஷ்கின் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், வரும் 2026 ஜனவரி 18ம் தேதியோடு முழுமையாக நிறைவடைகிறது. இறுதி போட்டியாளர்கள் 4 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், சபரி அல்லது திவ்யா இருவரில் ஒருவர் இந்த சீஸனின் டைட்டில் வின்னராவார் என கூறப்படுகிறது. இணையத்தில் வைரலாகி வரும் தகவலின்படி, திவ்யா இந்த சீசன் 9ன் டைட்டில் வின்னராவார் என கூறப்படுகிறது. அந்த டைட்டில் வின்னர் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.