Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

VIjay Sethupathi: ஜெயிலர் 2-வில் கேமியோ வேடத்தில் நடிக்க காரணம் இதுதான் – ஓபனாக சொன்ன விஜய் சேதுபதி!

Vijay Sethupathi Confirms Jailer 2 Cameo: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர்தான் விஜய் சேதுபதி. இவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தில் கேமியோ வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், அதை விஜய் சேதுபதி உறுதி செய்துள்ளார். மேலும் கேமியோ வேடத்தில் நடித்தற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

VIjay Sethupathi: ஜெயிலர் 2-வில் கேமியோ வேடத்தில் நடிக்க காரணம் இதுதான் – ஓபனாக சொன்ன விஜய் சேதுபதி!
ஜெயிலர் 2 படம் பற்றி விஜய் சேதுபதிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Jan 2026 20:27 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியாகியுள்ள படம்தான் தலைவன் தலைவி (Thalaivan Thalavii). கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியான இப்படம் மக்களிடையே சிறப்பான வரவேற்பையே பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு மொழியிலும் இயக்குநர் பூரி ஜெகன்னாத் (Puri Jagannadh) இயக்கத்தில் புது படத்திலும் இவர் நடித்துவந்தார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், விரைவில் வெளியாகவுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி அவ்வப்போது மற்ற நடிகர்களின் படங்களிலும் சிறப்பு வேடங்களில் நடித்துவருகிறார்.

அந்த வகையில் விஜய் சேதுபதி, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடித்துள்ள ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது, இந்நிலையில் விஜய் சேதுபதி அதை உறுதி செய்துள்ளார். அது குறித்து நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மறுஆய்வு குழுவினர் கேள்விக்கு சுதா கொங்கரா அளித்த பதில் – இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதி, “நான் ஜெயிலர் 2 படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளேன். அது ரஜினிகாந்த் சாரின் மீதுள்ள அன்பு மற்றும் மரியாதை காரணத்திற்காக மட்டுமே. படப்பிடிப்பு தளத்தில் நான் அவரை கவனிக்க, அவரது நடிப்பை உள்வாங்க மற்றும் அவரை பார்ப்பதன் மூலம் என்னால் வளர முடிகிறது. மேலும் சமீபகாலமாக படங்களுக்கான ஸ்கிரிப்ட் என்னை உண்மையிலே உற்சாகப்படுத்தும்போது மட்டுமே வில்லன் அல்லது கேமியோ வேடங்களில் நடிப்பதை நான் தேர்வு செய்கிறேன்.

இதையும் படிங்க: இப்போ என் என்ட்ரி… ஹீரோ என்ட்ரி… மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லர் வெளியானது

நான் பல கதைகளைக் கேட்டிருக்கிறேன். ஆனால் பெரும்பாலானவை ஹீரோவை உயர்த்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட ஒரு வழக்கமான வில்லன் வேடமாக இருக்கும். இதுபோன்று கதையில் நடிப்பதிற்கு எனக்கு ஆர்வமில்லை” என அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ வேடத்தில் நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேசிய வீடியோ :

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் கிட்டத்தட்ட 3 படங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள புது படம், காந்தி டாக்ஸ் மற்றும் ஜெயிலர் 2 போன்ற படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். இதை தவிர இவரின் நடிப்பில் புது புது படங்களும் தயாராகிவருகிறது. மேலும் இவர் மணிரத்னத்தின் இயக்கத்திலும் புது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.