Vijay Sethupathi: விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி.. அட இந்த படத்திலா?
Vijay Sethupathi New Movie: கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு பின் தற்போது தெலுங்கு சினிமாவில் இவர் வில்லனாக நடிக்கவுள்ளாராம். எந்த படத்தில் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
நடிகர் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்த பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியான படம்தான் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இப்படம் இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தற்போது தெலுங்கில் ஹீரோவாக நடித்துவருகிறார். இப்படம் தற்காலிகமாக பூரிசேதுபதி (PuriSethupathi) என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், முழுமையாக நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது. இப்படத்தை தொடர்ந்து தற்போது காட்டான் (Kattan) என்ற வெப் தொடரிலும் விஜய் சேதுபதி நடித்துவருகிறார். இவர் ஏற்கனவே உப்பனே என்ற படத்தின் மூலம் தெலுங்கில் வில்லனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து சில படங்களில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.
அந்த வகையில் பல வருடங்களுக்கு பின் மீண்டும் தெலுங்கில் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளாராம். நடிகர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) மற்றும் கீர்த்தி சுரேஷ் (Keerthi Suresh) இணைந்து நடித்துவரும் ரௌடி ஜனார்தன் (Rowdy janardhan) என்ற படத்தில் விஜய் சேதுபதி நெகடிவ் வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.




இதையும் படிங்க: வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படத்தை நிச்சயம் எடுப்பேன் – இயக்குநர் பொன்ராம்
நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த பூரிசேதுபதி பட பதிவு :
And that’s a wrap for #PuriSethupathi 🎬
After months of an intense, emotional, and joyful journey on the sets, the team has completed the entire shooting process 💥
Get ready for some truly exciting updates soon ❤️🔥
A #PuriJagannadh film 🎬@Charmmeofficial Presents 🎥… pic.twitter.com/HAvLjhTNfX
— Puri Connects (@PuriConnects) November 24, 2025
விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லனாகும் விஜய் சேதுபதி:
பிரபல தெலுங்கு இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்கத்தில் தெலுங்கில் உருவாகிவரும் படம்தான் ரௌடி ஜனார்தன். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துவருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2025 நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்றிருந்தது. இந்த படத்தை வாரிசு படத்தைத் தயாரித்த தில் ராஜு தயாரித்துவருகிறார். மேலும் இப்படத்திற்கு மலையாளம் சினிமா பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இசையமைப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வா வாத்தியார் பட கதை என்னை ரொம்பவே பயமுறுத்திடுச்சு.. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை- கார்த்தி ஓபன் டாக்!
தற்போது இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு இறுதியில் இப்படமானது மிக பிரம்மாண்டமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் தொடர்பான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ஏற்கனவே தமிழ் நடிகரான சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலையில், விஜய் சேதுபதி அதிரடி வில்லனாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.